இந்த இரண்டு விரல்கள் 2D:4D இருக்க.. அப்போ உங்களுக்கு சொட்டை விழ 100% சான்ஸ் இருக்கு!!

Photo of author

By Divya

இந்த இரண்டு விரல்கள் 2D:4D இருக்க.. அப்போ உங்களுக்கு சொட்டை விழ 100% சான்ஸ் இருக்கு!!

Divya

இன்று பெரும்பாலானோர் முடி உதிர்வு பிரச்சனையை சந்திக்கின்றனர்.முடி உதிர்வு பாதிப்பு ஏற்பட பல காரணங்களால் சொல்லப்படுகிறது.உடல் சூடு,ஹார்மோன் ஏற்றத்தாழ்வு,தலைமுடி பராமரிப்பின்மை,உடல் நலக் கோளாறு உள்ளிட்டவை தலைமுடி உதிர்விற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

தலைமுடி உதிர்வால் வயதானவர்கள் முதல் இளைஞர்கள் வரை கடுமையான பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.தலையில் கைவைத்தாலே முடி கொட்டுகிறது என்பது பலரின் கவலையாக இருக்கிறது.யாருக்கு முடி உதிர்வு ஏற்படும் என்று சொல்ல முடியாது.முன்பெல்லாம் ஆண்களுக்கு தான் வழுக்கை பிரச்சனை இருந்தது.ஆனால் தற்பொழுது இளம் பெண்களுக்கு கூட வழுக்கை ஏற்படுகிறது.

முகத்திற்கு அழகு சேர்ப்பதே தலைமுடி தான்.ஏர் நெத்தி இருந்தாலே முக அழகு குறைந்தது போன்று தெரியும்.அப்படி இருக்கையில் வழுக்கை விழத் தொடங்கினால் இளம் வயதிலேயே முதுமை தோற்றத்தை அடைய நேரிடும்.

இந்த காலத்தில் ஒவ்வொருவருக்கும் தலைமுடி பராமரிப்பின் மீது மிகுந்த அக்கறை இருக்க வேண்டும்.ஆனால் தலைக்கு எண்ணெய் வைப்பதை பலரும் அலர்ஜியாகவும் அழகை குறைக்கும் என்று நினைத்துக் கொள்கின்றனர்.

நாம் செய்யும் சில தவறுகளால் மட்டும் வழுக்கை ஏற்படுவதில்லை.நமது கை விரல்களின் தன்மையை பொருத்தும் வழுக்கையை கணிக்க முடியும்.அதாவது உங்கள் கையின் மோதிர விரல் மற்றும் ஆள்காட்டி விரலின் அளவை வைத்து எதிர்காலத்தில் வழுக்கை விழுமா என்பதை கணிக்கலாம்.

மோதிரம் மற்றும் ஆள்காட்டி விரல் விகிதாச்சாரம் 2D:4D என்ற விகிதத்துடன் தொடர்புடையது.உங்கள் ஆள்காட்டி விரலை ஒப்பிடுகையில் மோதிர விரல் நீளமாக இருந்தால் வழுக்கை விழ அதிக வாய்ப்பிருக்கிறது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.இது பிறப்பிலேயே தென்படுவதால் முடி உதிர்வு கண்டு அஞ்ச வேண்டாம்.இந்த நவீன காலத்தில் முடி வளர்ச்சி என்று பல்வேறு சிகிச்சைகள் நடைமுறையில் இருக்கின்றது.நீங்கள் முடி அறுவை சிகிச்சை மூலம் உரிய தீர்வு காணலாம்.