இவ்வாறு நடந்த கொண்டால் ரேஷன் அட்டை ரத்து செய்யப்படும்! மத்திய அரசு வெளியிட்ட ஷாக் நியூஸ்!
தமிழர்களின் பாரம்பரிய திருவிழாவாக இருப்பது தை பொங்கல் தான்.இந்த பண்டிகை தமிழர்கள் உழவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக கொண்டாடப்படுகின்றது.இந்த நாள் தமிழர்களுக்கே உரிய நாளாக கூறப்படுகின்றது.எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்குவது வழக்கம்.
அந்த வகையில் கடந்த ஆண்டு பொங்கல் பரிசாக 21பொருட்கள் அடங்கிய மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.அந்த பரிசு வழங்கும் பொழுது ரேஷன் கடைகளில் கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருபதற்காக எந்த தேதிகளில் யார் வந்து வாங்க வேண்டும் என டோக்கன்கள் வழங்கப்பட்டது.
நடப்பாண்டிலும் பொங்கல் பரிசு வழங்க தமிழக அரசு திட்டமிட்டது.கடந்த ஆண்டு வழங்கிய பொருட்களில் சுகாதாரமற்ற பொருட்கள் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது.அதனால் ஆலோசனை கூட்டத்தில் பொங்கல் பரிசு பணமாக வழங்க வாய்ப்புள்ளது என கூறப்பட்டது.
இந்நிலையில் பொங்கல் பரிசுதொகுப்பு ரூ 1000 மட்டும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.அதனை தொடர்ந்து மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் அரசின் இலவச ரேஷன் வசதியை தகுதியற்ற பல பேர் பயன்படுத்தி வருகின்றனர். அதனை தடுக்கும் வகையில் அரசு புதிய விதிமுறைகளை கொண்டுவந்துள்ளது.அந்த புதிய வழிமுறைகளை கடைபிடிக்காத ரேஷன் அட்டைதாரர்களின் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.