இந்த நிலை வந்தால் நாங்கள் செத்துப்போவோம்.. அண்ணாமலை தான் இதற்கு காரணம்!! மாஜி அதிமுக அமைச்சர் சரமாரி தாக்கு!!

Photo of author

By Rupa

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில், இனி அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டுமென்றால்  நாங்கள் தான் தலைமையில் இருப்போம், சீட்டு கேட்டு வாங்க கூடாது கொடுக்கும் நிலையில் தான் கட்சியின் செயல்பாடு இருக்கும் என்று பேசினார். இதற்கு அதிமுக-இடையே பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

அதுமட்டுமின்றி இதற்கு முன்பும் அண்ணாமலையின் பேச்சு தான் கட்சி பிரியவே காரணமாக இருந்தது.இதனை அக்கட்சி நிர்வாகிகளும் ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தகது.இவ்வாறு இருக்கையில் மேற்கொண்டு பிரச்சனையை வழக்கவேண்டுமென்றே அண்ணாமலை எண்ணி வருகிறார்.அந்தவகையில் நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பு பேச்சானது இருந்தது.

அவ்வாறு அவர் பேசியதற்கு மாஜி அமைச்சர் செல்லூர் ராஜு, அண்ணாமலைக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார். அவர் பேசியதாவது, அண்ணாமலைக்கு அதிகளவு வாய் கொழுப்பு, இவரது பேச்சாள்தான் அனைத்தும் இழக்க வேண்டியதாக உள்ளது. நேற்று மழையில் பெய்த காளான், இவரெல்லாம் தலைமை பற்றி பேசுகிறார். அதிமுக பாஜகவிடம் சென்று சீட் கேட்கும் நிலை வந்தால் நாங்கள் செத்துப் போவோம்.

அதிமுக வில் அரும்பாடு பட்டு உழைக்கும் கீழடி தொண்டர்கள் கூட மேலிடத்திற்கு வர முடியும். ஆனால் அண்ணாமலை அப்படி இல்லை. கட்சியின் தொண்டராக இல்லாமல் ஓர் பதவியிலிருந்து அப்படியே இங்கு வந்தவர். எந்த தகுதியும் இல்லாமல் தலைமை பற்றி பேசலாமா என்று சரமாரியாக அண்ணாமலையை தாக்கி பேசியுள்ளார்.