சென்னை: “சென்னையில் நடந்த நிகழ்ச்சில் பரபரப்பு கிளப்பிய பேச்சு ஆர்.ஜே. பாலாஜி”
நானும் ரவுடிதான், எல்.கே.ஜி, மூக்குத்தி அம்மன், ரன் பேபி ரன், புகழ்” போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி. நயன்தாரா நடிப்பில் வெளிவந்த ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். நடிப்பு, இயக்கம் என தொடர்ந்து இயங்கி வரும் ஆர்.ஜே. பாலாஜி சூர்யாவின் 45-வது படத்தை இயக்க உள்ளார். மேலும் இந்த படத்தை பா.ரஞ்சித்தின் உதவி இயக்குனராக பணியாற்றிய விஸ்வநாத் இயக்க உள்ளார். அவர் நடித்த சொர்க்கவாசல் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்த படம் தற்போது அதன் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை மக்களிடம் பெற்று வருகிறது. மேலும் இந்த படம் 1999-ல் மத்திய சிறைச்சாலையில் நடக்கும் அநிதி பற்றி இந்த கதை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த படத்தில் செல்வராகவன், கருணாஸ், பாலாஜி சக்திவேல், சோஷா சக்தி மற்றும் பலர் நடித்துள்ளார். இந்த படம் வருகிற 29-ம் தேதி திரையாரங்குகளில் வெளியாக உள்ளது.
மேலும் நிகழ்ச்சியில் பேசிய ஆர்.ஜே. பாலாஜி சில முக்கியமான தகவல்களை கூறினார். அதில் “விஜய் டிவியில் திட்டம் போட்டு ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினால் சிவகார்த்திகேயன் மாதிரி வந்துவிடலாம் என்று நினைக்கின்றனர். ஆனால் அப்படியெல்லாம் யாராலும் வரமுடியாது. சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் மிக சிறப்பான வேலை மற்றும் திறமையை வெளிப்படுத்தினார். மக்கள் அனைவருக்கும் பிடித்தது . இதனால் மட்டுமே விஜய் டிவியில் இருந்து சிவகார்த்திகேயன் இந்த நிலைமைக்கு வந்துள்ளார். விஜய் டிவிக்குள் சென்றாலே சிவகார்த்திகேயனை போல் ஆகிவிட முடியாது ” என்று அவர் கூறினார்.