தேங்காய் எண்ணையில் இந்த 2 பொருட்களை சேர்த்தால்.. முடி காட்டு புதர் போல் செழிப்பாக வளரும்!!

Photo of author

By Divya

தேங்காய் எண்ணையில் இந்த 2 பொருட்களை சேர்த்தால்.. முடி காட்டு புதர் போல் செழிப்பாக வளரும்!!

உங்களை விடாமல் துரத்தும் தலை முடி உதிர்வு பிரச்சனைக்கு இயற்கை முறையில் தீர்வு வேண்டும் என்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை தொடர்ந்து பின்பற்றுங்கள்.

தீர்வு 01:-

1)தேங்காய் எண்ணெய்
2)செம்பருத்தி பூ
3)செம்பருத்தி இலை

அடுப்பில் ஒரு வாணலி வைத்து 500 மில்லி தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் ஒரு கைப்பிடி அளவு செம்பருத்தி பூவின் இதழ் மற்றும் ஒரு கைப்பிடி அளவு செம்பருத்தி இலை சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

இந்த எண்ணெயை நன்கு ஆறவிட்டு ஒரு பாட்டிலுக்கு வடிகட்டி கொள்ளவும்.தினமும் இந்த எண்ணெயை தலைக்கு பயன்படுத்தி வந்தால் தலை முடி அடர்த்தியாகவும்,கருமையாகவும் வளரும்.

தீர்வு 02:-

1)தேங்காய் எண்ணெய்
2)நெல்லிக்காய்
3)வெந்தயம்

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 500 மில்லி தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.பிறகு 10 பெரு நெல்லிக்காயை விதை நீக்கி ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பேஸ்டாக்கி கொள்ளவும்.

இந்த நெல்லிக்காய் பேஸ்டை சூடாகி கொண்டிருக்கும் எண்ணெயில் சேர்க்கவும்.பின்னர் 2 தேக்கரண்டி வெந்தயத்தை போட்டு மிதமான தீயில் கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.இந்த எண்ணெயை நன்கு ஆறவிட்டு ஒரு பாட்டிலுக்கு வடிகட்டி கொள்ளவும்.தினமும் இந்த எண்ணெயை தலைக்கு பயன்படுத்தி வந்தால் தலை முடி அடர்த்தியாகவும்,கருமையாகவும் வளரும்.

தீர்வு:-

1)தேங்காய் எண்ணெய்
2)கொய்யா இலை
3)அரப்பு

அடுப்பில் ஒரு வாணலி வைத்து 500 மில்லி தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் ஒரு கைப்பிடி அளவு கொய்யா இலை மற்றும் ஒரு கைப்பிடி அளவு அரப்பு சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

இந்த எண்ணெயை நன்கு ஆறவிட்டு ஒரு பாட்டிலுக்கு வடிகட்டி கொள்ளவும்.தினமும் இந்த எண்ணெயை தலைக்கு பயன்படுத்தி வந்தால் தலை முடி அடர்த்தியாகவும்,கருமையாகவும் வளரும்.