தேங்காய் எண்ணெயில் இந்த பொருளை சேர்த்தால்.. முடி வளர்ச்சி கையில் பிடிக்க முடியாத அளவு இருக்கும்!!

Photo of author

By Divya

பெண்களுக்கு கருமையான மற்றும் அடர்த்தியான கூந்தல் தான் அழகை சேர்க்கும்.முன்பெல்லாம் பெண்களின் முடி அடர்த்தியாகவும்,நீளமாகவும் இருப்பது சாதாரணமாக இருந்தது.ஆனால் தற்பொழுது பெரும்பாலானோர் முடி உதிர்வு பிரச்சனையை எதிர்கொண்டு வருகின்றனர்.

மன அழுத்தம்,ஊட்டச்சத்து குறைபாடு,கெமிக்கல் பொருட்களால் முடி உதிர்வு அதிகரிக்கிறது.இதை சரி செய்ய தேங்காய் எண்ணெயில் சில பொருட்களை கலந்து பயன்படுத்துங்கள்.

தேவையான பொருட்கள்:

*பெருஞ்சீரக விதை – ஒரு தேக்கரண்டி
*தேங்காய் எண்ணெய் – 200 மில்லி

செய்முறை விளக்கம்:

1)முதலில் பெருஞ்சீரகத்தை வாணலியில் போட்டு லேசாக வறுக்க வேண்டும்.அடுத்து இதை மிக்சர் ஜாரில் போட்டு உரலில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

2)அடுத்து அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து 200 மில்லி தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.

3)பிறகு பெருஞ்சீரக விதை பொடியை அதில் கொட்டி குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

4)இந்த எண்ணெயை நன்கு ஆறவைத்து ஒரு பாட்டிலில் பில்டர் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

5)இந்த பெருஞ்சீரக எண்ணெயை தலைக்கு பயன்படுத்தி வந்தால் முடி வளர்ச்சி அதிகாரிக்கும்.

தேவையான பொருட்கள்:

*தேங்காய் எண்ணெய் – 200 மில்லி
*கறிவேப்பிலை – இரண்டு கொத்து

செய்முறை விளக்கம்:

1)முதலில் பாத்திரம் ஒன்றில் 200 மில்லி தேங்காய் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்த வேண்டும்.

2)அடுத்து இரண்டு கொத்து கறிவேப்பிலையை உலர்ந்த நிலையில் மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

3)இந்த கறிவேப்பிலை பொடியை தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி அடுப்பை அணைக்க வேண்டும்.

4)பிறகு இந்த எண்ணெயை ஆறவைத்து ஸ்கால்ப்பில் படும்படி தடவினால் முடி வளர்ச்சி நன்றாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

*கருஞ்சீரகம் – ஒரு தேக்கரண்டி
*தேங்காய் எண்ணெய் – 150 மில்லி
*வெந்தயம் – கால் தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:

1)அடுப்பில் வாணலி வைத்து ஒரு தேக்கரண்டி கருஞ்சீரகம் மற்றும் ஒரு தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து மிதமான தீயில் வறுத்துக் கொள்ள வேண்டும்.

2)பின்னர் மிக்சர் ஜாரில் இந்த பொருட்களை போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

3)அடுத்து அடுப்பில் வாணலி வைத்து 150 மில்லி தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.

4)அதன் பின்னர் அரைத்த கருஞ்சீரக வெந்தயப் பொடியை அதில் கொட்டி குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.இந்த எண்ணெயை ஆறவைத்து தலைக்கு பயன்படுத்தி வந்தால் அடர்த்தியாக முடி வளரும்.