மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு அப்ளை செய்தால்.. ரூ.2,00,000 வரை காப்பீடு பெறலாம்!!
மத்திய அரசாங்கம் நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக பல்வேறு நலத் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது.இலவச அரிசி,இலவச வீடு,இலவச கல்வி வரிசையில் இலவச மருத்துவ காப்பீடும் வழங்கப்படுகிறது.இதில் குறைந்த பிரீமியம் தொகையில் “பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா” என்ற திட்டத்தின் கீழ் ரூ.2,00,000 வரை மருத்துவ காப்பீடு வழங்கப்படுகிறது.நாட்டு மக்கள் அனைவரும் காப்பீட்டு பலனை பெற வேண்டும் என்ற நோக்கில் இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana
இத்திட்டத்தில் பயன்பெற பாலிசிதாரர்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியில் “பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா” திட்டத்தில் ஆண்டிற்கு ரூ.436 பிரீமியம் வேண்டும்.எதிர்பாரா விதமாக பாலிசிதாரர் இத்திட்டத்தில் உயிரிழந்துவிட்டால் அவரது குடும்பத்திற்கு ரூ.2,00,000 காப்பீட்டு தொகை வழங்கப்படும்.
பாலிசிதாரர் ஒவ்வொரு ஆண்டின் மே மாத இறுதிக்குள் அந்த வருடத்திற்கான பிரீமியம் தொகையான ரூ.436 செலுத்திவிட வேண்டும்.இவ்வாறு செய்தால் ஜூன் 01 முதல் அடுத்த மே 31 வரை காப்பீட்டு பலனை பெற முடியும்.இதன் காரணமாக பாலிசிதாரர் ஒவ்வொரு வருடமும் காப்பீட்டை புதுப்பிப்பது அவசியமாகும்.
குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 50 வயது வரை உள்ள நபர்கள் இந்த திட்டத்தில் இணைய முடியும்.மே 25-மே 31 தேதிகளில் உங்கள் வங்கி கணக்கில் பணம் இல்லாத பட்சத்தில் உங்களுக்கான காப்பீடு காலாவதியாகி விடும் என்பதை மறந்துவிடக் கூடாது.இந்த திட்டத்தில் தனி நபர் ஒருவர் ஒரு பாலிசி மட்டுமே எடுக்க முடியும்.
இத்திட்டத்தில் இணைய மருத்துவ பரிசோதனை கட்டாயமில்லை.வங்கி கணக்கு எண் மற்றும் ஆதார் அட்டை பயன்படுத்தி இந்த திட்டத்தில் பிரீமியம் தொகை செலுத்தி வரலாம்.பாலிசி எடுக்க உள்ள நபர் கட்டாயம் தங்கள் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைந்திருக்க வேண்டும்.
இந்த திட்டத்தில் பாலிசி செலுத்தி வந்தவர் எதிர்பாராவிதமாக இறந்துவிட்டால் அவர் குறிப்பிட்டிருக்கும் நாமினி வங்கிக்குச் சென்று பாலிசிதாரரின் இறப்புச் சான்றிதழ்,மருத்துவமனை ரசீது,கேன்சல் செய்யப்பட்ட செக் லீப்,நாமினியின் வங்கிக் கணக்கு ஆகியவற்றை சமர்ப்பித்து காப்பீட்டு தொகையை பெற்றுக் கொள்ள முடியும்.ஆவண சரிபார்பிற்கு பிறகு இன்சூரன்ஸ் நிறுவனம் ஒரு மாதத்திற்குள் நாமினி வங்கி கணக்கிற்கு காப்பீட்டு தொகையை செலுத்திவிடும்.