இந்த க்ரீமை உடலுக்கு தடவி வந்தால்.. அக்னி வெயிலிலும் உங்கள் மேனி சும்மா தகதகன்னு தங்கம் மின்னும்!!

Photo of author

By Rupa

இந்த க்ரீமை உடலுக்கு தடவி வந்தால்.. அக்னி வெயிலிலும் உங்கள் மேனி சும்மா தகதகன்னு தங்கம் மின்னும்!!

மேனி பளபளப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக நாம் பல்வேறு க்ரீம்களை உடலில் தடவி வருகின்றோம்.இவை உடலுக்கு பல்வேறு கேடுகளை ஏற்படுத்தக் கூடியவையாக இருக்கிறது.எனவே உடலை மிருதுவாகவும்,பளபளப்பாகவும் வைத்துக் கொள்ள வீட்டில் பயன்படுத்தும் பொருட்களை வைத்து க்ரீம் செய்து உடலுக்கு அப்ளை செய்து வரலாம்.

தேவையான பொருட்கள்:-

1)தேங்காய் எண்ணெய்
2)பாதாம் எண்ணெய்
3)பிரஸ் கற்றாழை ஜெல்
4)கிளிசரின்

செய்முறை:-

முதலில் ஒரு கற்றாழை மடலை தோல் நீக்கி அதன் ஜெல்லை மட்டும் தனியாக பிரித்து ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொள்ளவும்.அதன் பின்னர் ஒரு தேக்கரண்டி பாதாம் எண்ணெய் மற்றும் ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றி நன்கு கலக்கவும்.

பிறகு அதில் ஒரு தேக்கரண்டிகிளிசரின் சேர்த்து நன்றாக கலந்தால் ஒரு க்ரீம் பதம் கிடைக்கும்.இதை ப்ரிட்ஜில் வைத்து ஒரு நாள் முழுவதும் குளிர விடவும்.

பயன்படுத்தும் முறை:-

தினமும் இரவு நேரத்தில் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி ஒரு காட்டன் துணியால் துடைத்துக் கொள்ளவும்.

பின்னர் தயாரித்து வைத்துள்ள க்ரீமை சிறிதளவு எடுத்து முகம் முழுவதும் அப்ளை செய்து விட்டு படுக்கவும்.காலையில் எழுந்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும்.இவ்வாறு தினமும் செய்து வந்தால் முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் பொலிவாகத் தொடங்கும்.அதேபோல் வெளியில் செல்வதற்கு முன் உடல் முழுவதும் தடவினால் வெயிலின் தாக்கத்தால் உடல் கருமையாவது தடுக்கப்படும்.மேனி மிகவும் மிருதுவாகவும் மாறத் தொடங்கும்.