இளம் வயத்தில் முகத்தில் சுருக்கம்,வறட்சி இருந்தால் முதுமை தோற்றத்தை ஏற்படுத்திவிடும்.முக சுருக்கம் நீங்கி பால் போன்ற மிருதுவான சருமம் கிடைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள க்ரீமை தயாரித்து பயன்படுத்துங்கள்.
தேவையான பொருட்கள்:
1)எலுமிச்சை சாறு
2)கஸ்தூரி மஞ்சள் தூள்
3)சந்தனம்
4)கசகசா
செய்முறை:
ஒரு கிண்ணத்தில் 5 கிராம் கசகசா சேர்த்து காய்ச்சாத பால் ஊற்றி ஒரு மணி நேரத்திற்கு ஊறவிடவும்.
பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்தெடுக்கவும்.அதன் பிறகு ஒரு கிண்ணத்தில் இரண்டு தேக்கரண்டி சந்தனத் தூள்,ஒரு தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சள் தூள் சேர்த்து மிக்ஸ் செய்யவும்.
அதன் பிறகு அரைத்த கசகசா பேஸ்டை அதில் போட்டு கலந்து விடவும்.பிறகு அதில் மூன்று தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து க்ரீம் பதத்திற்கு கலக்கவும்.
பயன்படுத்தும் முறை:
ஐஸ் நீரை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளவும்.இதை பயன்படுத்தி முகத்தை கழுவி சுத்தப்படுத்தவும்.பிறகு ஒரு காட்டன் துணியில் முகத்தை துடைத்து விட்டு தயாரித்து வைத்துள்ள க்ரீமை முகத்திற்கு அப்ளை செய்யவும்.
பிறகு கைகளை கொண்டு மென்மையாக மசாஜ் செய்யவும்.10 முதல் 15 நிமிடங்களுக்கு மசாஜ் செய்து மேலும் 15 நிமிடங்களுக்கு உலரவிடவும்.பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும்.இப்படி தினமும் செய்து வந்தால் முகப் கருமை,பருக்கள்,கரும் புள்ளிகள்,சுருக்கம் மறைந்து பொலிவு பெறும்.
தேவையான பொருட்கள்:
1)கற்றாழை
2)தயிர்
3)எலுமிச்சை சாறு
4)சர்க்கரை
செய்முறை:
ஒரு கற்றாழை மடலில் இருந்து ஜெல் எடுத்து சுத்தப்படுத்தி அரைத்துக் கொள்ளவும்.இதை ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.பிறகு ஒரு தேக்கரண்டி கெட்டி தயிர்,ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் ஒரு தேக்கரண்டி வெள்ளை சர்க்கரை சேர்த்து பேஸ்ட்டாகி கொள்ளவும்.
இதை முகத்திற்கு அப்ளை செய்து 20 முதல் 30 நிமிடங்கள் வரை உலர விடவும்.பிறகு குளிர்ந்த நீர் பயன்படுத்தி முகத்தை கழுவி சுத்தப்படுத்தவும்.இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் முக சுருக்கம் நீங்கி சருமம் மிருதுவாகவும்,பொலிவாகவும் காணத் தொடங்கும்.