இதை போட்டால் ஒரு முடி கூட கொட்டாது!! 100% ரிசல்ட் கிடைக்கும்!!
இன்றைய காலத்தில் முடி கொட்டுதல் பாதிப்பை அனைவரும் சந்தித்து வருகிறோம்.இதற்கு ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை காரணமாக சொல்லப்படுகிறது.உடலுக்கு சத்தான உணவு கிடைத்தால் தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.அதேபோல் தான் நம் தலை முடிகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குவது என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.இதற்கு இயற்கை வழியில் மட்டுமே தீர்வு இருக்கிறது.இவ்வாறு செய்வதன் மூலம் கூந்தலுக்கு எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படாது.
தேவையான பொருட்கள்:-
*வெந்தயம் – 2 தேக்கரண்டி
*கருஞ்சீரகம் – 2 தேக்கரண்டி
*கருவேப்பிலை தூள் – தேவையான அளவு
செய்முறை:-
முதலில் ஒரு பாத்திரம் எடுத்து வெந்தயம் 2 தேக்கரண்டி,2 தேக்கரண்டி கருஞ்சீரகம் சேர்த்து சேர்த்து கொள்ளவும்.பின்னர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க விடவும்.
பின்னர் தண்ணீர் நிறம் மாறி சற்று பிசு பிசுப்பு தன்மை வந்ததும் அதில் தேவையான அளவு கறிவேப்பிலை பொடி சேர்த்து கொள்ளவும்.இந்த கருவேப்பிலை பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.அல்லது பச்சை கருவேப்பிலை தேவையான அளவு எடுத்து நிழலில் காயவைத்து பின்னர் மிதமான தீயில் வறுத்து பொடி செய்து கொள்ளவும்.
இந்த கருவேப்பிலை பொடி நன்கு கொதித்து வந்ததும் அடுப்பை அணைக்கவும்.பின்னர் இதை ஆறவிட்டு தலைக்கு அப்ளை செய்யவும்.
இதை தலைக்கு பயன்படுத்துவதற்கு முன் தேங்காய் எண்ணெய் வைத்து முடியை நன்கு சிக்கு எடுத்து கொள்ளவும்.பின்னர் இந்த கருவேப்பிலை ஹேர் பேக்கை தலைக்கு நன்கு அப்ளை செய்யவும்.இதை 45 நிமிடம் ஊற விடவும்.பின்னர் ஷாம்பு பயன்படுத்தாமல் தலைக்கு குளிக்கவும்.இப்படி அடிக்கடி செய்து வந்தால் தலை முடி உதிர்வு நின்று முடி காடு மாதிரி வளரத் தொடங்கும்.