இந்த எண்ணெய் தடவினால் 50 வயதானாலும் தலையில் ஒரு முடி கூட நரைக்காது கொட்டாது!!

Photo of author

By Divya

இந்த எண்ணெய் தடவினால் 50 வயதானாலும் தலையில் ஒரு முடி கூட நரைக்காது கொட்டாது!!

தலையில் உள்ள முடியை சிறு வயதில் இருந்தே பராமரித்து வந்தால் மட்டுமே முதுமையில் நரை,முடி உதிர்தல் உள்ளிட்ட பிரச்சனைகளை சந்திக்காமல் இருப்போம்.ஆனால் உங்களில் பலர் தலை முடியை பராமரிப்பதில் என்பது தான் உண்மை.

இதனாலே சிறு வயதில் இளநரை,முடி அடர்த்தி குறைதல்,முடி வறட்சி,பொடுகு,செம்பட்டை முடி போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.இது போன்ற தலை முடி பிரச்சனைகளுக்கு வாழ்நாள் தீர்வாக இருப்பது மூலிகை எண்ணெய் மட்டுமே.

கடையில் கிடைக்க கூடிய தேங்காய் எண்ணெய்களில் பெரும்பாலும் கலப்பட எண்ணையாக இருப்பதினால் அவை முடி ஆரோக்கியத்திற்கு எந்த விதத்திலும் பயன் தராது.எனவே வீட்டிலேயே மூலிகை எண்ணெய் காய்ச்சி தலைக்கு பயன்படுத்தி வந்தால் முழு பலனை அனுபவிக்கலாம்.

தேவையான பொருட்கள்:-

1)சுத்தமான தேங்காய் எண்ணெய் – 1 லிட்டர்
2)சின்ன வெங்காயம் – 10(உரித்து இடித்தது)
3)அம்மான் பச்சரிசி – 1/4 கைப்பிடி அளவு
4)கருஞ்சீரகம் – 2 தேக்கரண்டி
5)வெந்தயம் – 2 தேக்கரண்டி
6)கற்றாழை ஜெல் – 1/4 கப்
7)பொடுதலை – 50 கிராம்
8)செம்பருத்தி பூ இதழ் – 1 கப்
9)செம்பருத்தி இலை – 1 கப்
10)மருதாணி விதை – 1/4 கப்
11)பெரு நெல்லிக்காய் துண்டு – 1/4 கப்
12)பன்னீர் ரோஜா இதழ் – 1/2 கப்
13)அருகம்புல் – 1/2 கப்
14)வெட்டி வேர் – 1/4 கைப்பிடி அளவு
15)துளசி – 1/4 கப்
16)கொய்யா இலை – 10
17)வெற்றிலை – 2
18)அவுரி இலை – 1/2 கப்

செய்முறை:-

முதலில் ஒரு கிண்ணம் எடுத்து வெந்தயத்தை போட்டு தண்ணீர் ஊற்றி 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.அதன் பின்னர் கற்றாழை மடலை தோல் நீக்கி அதன் ஜெல்லை நறுக்கி 2 அல்லது 3 முறை தண்ணீரில் போட்டு அலசி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.

பின்னர் பெரிய நெல்லிக்காய் 10 என்ற எண்ணிக்கையில் எடுத்து விதை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

பின்னர் மேலே சொல்லப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் சொல்லிய அளவுபடி எடுத்து வைத்துக் கொள்ளவும்.அவுரி இலை கிடைக்கவில்லை என்றால் நாட்டு மருந்து கடையில் கிடைக்கின்ற அவுரி பொடி 50 கிராம் அளவு வாங்கி பயன்படுத்தலாம்.

இப்பொழுது அடுப்பில் ஒரு இரும்பு கடாய் வைத்து சுத்தமான தேங்காய் எண்ணெய் ஒரு லிட்டர் ஊற்றி சூடாக்கவும்.பின்னர் எடுத்து வைத்துள்ள பொருட்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக போட்டு மிதமான தீயில் காய்ச்சவும்.

தேங்காய் எண்ணெய் நிறம் மாறி வரும் வரை குறைந்தது 30 நிமிடங்கள் காய்ச்சி அடுப்பை அணைக்கவும்.பிறகு இந்த மூலிகை எண்ணெயை ஒரு நாள் முழுவதும் ஆறவிட்டு மறுநாள் ஒரு கண்ணாடி பாட்டிலுக்கு வடிகட்டி கொள்ளவும்.

இந்த எண்ணையை தலைக்கு பயன்படுத்தி வந்தால் முடி உதிர்தல்,இளநரை,முடி வெடிப்பு,பொடுகு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு முழு தீர்வு கிடைக்கும்.