இந்த எண்ணெயை தடவினால்.. வாழ்நாளில் நடைமுடி பிரச்சனை இருக்காது!!

Photo of author

By Divya

இன்று இளம் வயதினருக்கு எளிதில் முடி நரைத்துவிடுகிறது.இதனால் சிறு வயதிலேயே வயதானவர்கள் போல் தென்படுகிறாரகள்.சிறு வயதில் தலை முடி நரைக்க முக்கிய காரணம் என்னவென்றால் ஊட்டச்சத்து பற்றாக்குறை தான்.

அதுமட்டுமின்றி தலையை முடியை ஆரோக்கியமான முறையில் பராமரிக்காமல் இருப்பதால் கருமை முடி நரைத்துவிடுகிறது.

மேலும் முடி கொட்டல்,முடி வெடிப்பு,முடியின் நிறம் மாறுதல்,முடியின் அடர்த்தி குறைதல் போன்றவை ஏற்படுகிறது.இளநரையை கருமையாக மாற்ற கடைகளில் விற்கும் ஹேர் டை பயன்படுத்துவதை தவிர்த்துவிடுங்கள்.வீட்டிலேயே ஹேர் ஆயில் தயாரித்து பயன்படுத்தி வந்தால் தலைமுடி முழுமையாக கருப்பாகும்.

தேவையான பொருட்கள்:-

1)தேங்காய் எண்ணெய் – 250 மில்லி லிட்டர்
2)கருஞ்சீரகம் – ஒரு தேக்கரண்டி
3)கரிசலாங்கண்ணி பொடி – ஒரு தேக்கரண்டி
4)மருதாணி பொடி – அரை தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

தலை முடியை கருமையாக்கும் ஹேர் ஆயில் தயாரிப்பு முறையை விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது.

முதலில் 250 மில்லி அதாவது கால் லிட்டர் சுத்தமான தேங்காய் எண்ணையை எடுத்துக் கொள்ளுங்கள்.

பிறகு மருதாணி பொடி அரை தேக்கரண்டி,கரிசலாங்கண்ணி பொடி ஒரு தேக்கரண்டி மற்றும் கருஞ்சீரகம் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.இந்த மூன்று பொருட்களும் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.

அதன் பிறகு அடுப்பில் ஒரு இரும்பு வாணலி வைத்து 250 மில்லி சுத்தமான தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்குங்கள்.

பிறகு அதில் கருஞ்சீரகம்,மருதாணி பொடி மற்றும் கரிசலாங்கண்ணி பொடி சேர்த்து மிதமான தீயில் கொதிக்க வையுங்கள்.பிறகு இந்த எண்ணெயை ஆறவிட்டு ஒரு பாட்டிலுக்கு வடிகட்டி கொள்ளுங்கள்.இந்த எண்ணெயை தலைக்கு பயன்படுத்தி வந்தால் ஒரு சில தினங்களில் நரைமுடி அனைத்தும் கருமையாகிவிடும்.