நிஜமாவே இந்த எண்ணையை தலைக்கு தடவினால் ஒரு முடி கூட உதிராது!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க!!

Photo of author

By Divya

நிஜமாவே இந்த எண்ணையை தலைக்கு தடவினால் ஒரு முடி கூட உதிராது!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க!!

Divya

தலைமுடி உதிர்வு பிரச்சனையை கட்டுப்படுத்த உதவும் அற்புத வீட்டு வைத்தியங்கள்.இதில் ஏதேனும் ஒன்றை பின்பற்றி வந்தாலும் முடி உதிர்வை கட்டுப்படுத்திவிடலாம்.

தீர்வு 01:

சின்ன வெங்காயம்
பூண்டு
தேங்காய் எண்ணெய்

அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து 250 மில்லி தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பின்னர் இரண்டு சின்ன வெங்காயம் மற்றும் இரண்டு பல் பூண்டை தோல் நீக்கிவிட்டு இடித்து தேங்காய் எண்ணையில் போட்டு காய்ச்ச வேண்டும்.

இந்த எண்ணெயை நன்றாக ஆறவைத்து வடித்து தலைக்கு தடவி வந்தால் முடி கொட்டல் பிரச்சனையே இனி ஏற்படாது.

தீர்வு 02:

வேப்பிலை பொடி
தேங்காய் பால்

ஒரு கைப்பிடி வேப்பிலையில் தண்ணீர் ஊற்றி நன்றாக அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு ஒரு மூடி தேங்காய் துருவலை மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து பால் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த தேங்காய் பாலில் வேப்பிலை பேஸ்ட் கலந்து தலை முழுவதும் தடவி சிறிது நேரம் ஊறவைத்து குளித்தால் தலையில் உள்ள பொடுகு,பூஞ்சைகள் நீங்கும்.இந்த பாதிப்புகள் இல்லாமல் இருந்தால் தலை முடி அதிகமாக வளரும்.

தீர்வு 03:

மகிழம் பூ
ரோஜா இதழ்
எலுமிச்சை தோல்
வெந்தயம்
தயிர்
தேங்காய் எண்ணெய்

மகிழம் பூ,ரோஜா இதழ் மற்றும் எலுமிச்சை தோலை நன்றாக காய வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இவற்றை மிக்சர் ஜாரில் போட்டு இரண்டு தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த பவுடரை கிண்ணத்தில் கொட்டி தயிர் சிறிதளவு சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.அதன் பிறகு அடுப்பில் வாணலி வைத்து 500 மில்லி தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு அதில் தயாரித்து வைத்துள்ள கலவையை போட்டு குறைந்த தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

தேங்காய் எண்ணெய் நன்கு கொதித்து வந்ததும் அடுப்பை அணைத்து ஆறவிட வேண்டும்.இந்த எண்ணையை தலைக்கு பயன்படுத்தி வந்தால் முடி உதிர்வு நின்று முடி வளர்ச்சி அதிகரிக்கும்.