1 நாளில் வியர்குரு காணமல் போக.. இதை மட்டும் உடலில் தடவுங்கள்!!

Photo of author

By Divya

1 நாளில் வியர்குரு காணமல் போக.. இதை மட்டும் உடலில் தடவுங்கள்!!

Divya

சருமத்தில் காணப்படும் வியர்க்குரு கொப்பளங்கள் மறைய,சரும எரிச்சல்,அரிப்பு வராமல் இருக்க இந்த குறிப்பை பின்பற்றுங்கள்.

தீர்வு 01:-

கற்றாழை ஜெல்

உடலுக்கு குளிர்ச்சி தரும் இயற்கை பொருள் கற்றாழை.செடியில் இருந்து பிரஸான கற்றாழை மடல் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதன் மேல் தோலை நீக்கிவிட்டு உள்ளிருக்கும் சோற்றை தனியாக பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து இதை பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி ஏழு முதல் எட்டு முறை அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

அதன் பிறகு இந்த கற்றாழை ஜெல்லை மிக்சர் ஜாரில் போட்டு நன்றாக அரைக்க வேண்டும்.இந்த ஜெல்லை ஒரு சுத்தமான டப்பாவில் ஊற்றி வைத்துக் கொள்ள வேண்டும்.இதை சருமத்தில் அப்ளை செய்து வந்தால் வியர்வை கொப்பளம் மறையும்.

தீர்வு 02:-

சந்தனம் மற்றும் மஞ்சள்

ஒரு துண்டு சநதனம் எடுத்து தண்ணீரில் ஊறவைத்து பேஸ்ட்டாக்கி கொள்ள வேண்டும்.அடுத்து அதில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து குழைத்து வியர்க்குரு கொப்பளம் மீது தடவினால் அவை சீக்கிரம் மறைந்துவிடும்.

தீர்வு 03:-

வெட்டி வேர் பொடி மற்றும் மஞ்சள் தூள்

கிண்ணம் ஒன்றில் இரண்டு தேக்கரண்டி அளவு வெட்டி வேர் பொடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து மிக்ஸ் செய்ய வேண்டும்.

பின்னர் சிறிதளவு ரோஸ் வாட்டர் சேர்த்து குழைத்துக் கொள்ள வேண்டும்.இந்த பேஸ்டை சருமத்தில் பூசி சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும்.இப்படி செய்தால் வியர்க்குரு கொப்பளங்கள் மறைந்துவிடும்.

அதேபோல் அருகம்புல்லை பொடித்து மஞ்சள் கலந்து வியர்க்குரு கொப்பளங்கள் மீது பூசினால் அவை சீக்கிரம் குணமாகும்.