Pink Lip: உதடுகள் மீதுள்ள கருமை நீங்க இங்கு கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வழிமுறைகளில் ஒன்றை மட்டும் தொடர்ந்து பின்பற்றி வாருங்கள்.
தேவையான பொருட்கள்:-
1)சர்க்கரை – ஒரு தேக்கரண்டி
2)தேன் – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
முதலில் ஒரு கிண்ணம் எடுத்துக் கொள்ளுங்கள்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி அளவு வெள்ளை சர்க்கரை சேர்த்துக் கொள்ளுங்கள்.
அடுத்ததாக ஒரு தேக்கரண்டி அளவு தூயத் தேனை அதில் ஊற்றி பேஸ்ட் பதத்திற்கு கலந்து கொள்ளுங்கள்.பிறகு இந்த பேஸ்டை உதடுகள் மீது அப்ளை செய்து 15 நிமிடங்களுக்கு காயவிடுங்கள்.
அதன் பிறகு குளிர்ந்த நீரில் உதடுகளை கழுவ வேண்டும்.இவ்வாறு செய்து வந்தால் உதட்டு கருமை முழுமையாக நீங்கிவிடும்.
தேவையான பொருட்கள்:-
1)பீட்ரூட் – ஒரு துண்டு
2)சர்க்கரை – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
முதலில் பீட்ரூட் துண்டை மிக்சர் ஜாரில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து மிதமான தீயில் சிறிது நேரம் சூடுபடுத்த வேண்டும்.
அடுத்து அரைத்த பீட்ரூட் பேஸ்டை அதில் போட்டு நன்கு சுண்டி வரும் வரை கொதிக்க வைத்து அடுப்பை அணைக்க வேண்டும்.பிறகு இந்த பேஸ்டை நன்கு ஆறவைத்து உதடுகளுக்கு பயன்படுத்தி வந்தால் நாளடைவில் உதடு கருமை நீங்கி சிவப்பழகை பெறும்.
தேவையான பொருட்கள்:-
1)கற்றாழை ஜெல் – ஒரு தேக்கரண்டி
2)தேன் – ஒரு தேக்கரண்டி
3)கேரட் சாறு – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
முதலில் ஒரு துண்டு கற்றாழையை தோல் நீக்கிவிட்டு அதில் இருந்து ஜெல்லை மட்டும் தனியாக பிரித்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு துண்டு கேரட்டை மிக்சர் ஜாரில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.இந்த கேரட் பேஸ்ட்டில் இருந்து சாறை மட்டும் தனியாக பிரித்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் ஒரு கிண்ணத்தில் கற்றாழை ஜெல் சேர்த்துக் கொள்ள வேண்டும்.அடுத்து கேரட் சாறு சேர்த்து நன்கு மிக்ஸ் செய்ய வேண்டும்.பிறகு ஒரு தேக்கரண்டி தூயத் தேனை அதில் ஊற்றி நன்கு கலந்து உதடுகள் மீது அப்ளை செய்து வந்தால் உதட்டு கருமை நீங்கும்.