Breaking News, Life Style

உங்களுக்கு துலாம் ராசியா..அப்பொழுது இந்த வருட சனிப்பெயர்ச்சி உங்களுக்கு எப்படி இருக்கும் என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!!

Photo of author

By Gayathri

பொதுவாக துலாம் ராசிக்காரர்கள் மற்றவர்களுக்கு தீங்கு செய்ய மாட்டார்கள். மற்றவர்களை எவ்வாறு உயர்த்தலாம் எவ்வாறு நன்றாக வைத்துக் கொள்ளலாம் என்பதிலே தான் அவர்கள் நிம்மதி கொள்வார்கள். நம்மால் அவர் நன்றாக உள்ளார் என்பதை நினைத்து பெருமிதம் கொள்பவரும் இவர்கள்தான். அத்தகைய துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வருட சனிப்பெயர்ச்சி பலன் எப்படி இருக்கும் என்பதை பற்றி காணலாம்.
உங்கள் ராசியில் இருந்து ஆறாம் வீட்டிற்கு சனி பகவான் வரவிருக்கிறார். இந்த சனிப்பெயர்ச்சி ஆனது துலாம் ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் சுகத்தை ஏற்படுத்தும். அதே சமயம் அந்த சுகத்திற்கே பிரச்சனை வரக்கூடிய வாய்ப்பும் உள்ளது. அதாவது இந்த ராசிக்காரர்கள் இந்த சனி பெயர்ச்சியினால் அவர்களது கடனை அடைக்க வாய்ப்பு ஏற்படும். அந்த கடனானது உறவுகளுக்கு இடையே உள்ள கடனை அடைப்பதற்கான வழியாகும். தன்னை பெற்றவர்களுக்கான கடன், சகோதர சகோதரிகளுக்கு செய்ய வேண்டிய கடன் ஆகியவற்றை குறிக்கிறது.
அதேபோன்று பணக்கடன்களை அடைப்பதற்கும் கடவுள் வழியினை காட்டுவார். அனைத்து பிரச்சனைகளும் நீங்கும் சனி பகவானின் அருள் நன்றாகவே கிடைக்கும். பெற்ற கடன், ரத்த கடன், பணக்கடன், மன வருத்தம் ஆகிய அனைத்துமே நீங்கி மன நிம்மதியை பெறக்கூடிய நாளாக இனி வரக்கூடிய நாட்கள் இருக்கும்.
அனைத்திலும் வெற்றியை காணக்கூடிய துலாம் ராசியினர் உடல் நலத்தில் மட்டும் அதிக கவனத்துடன் இருப்பது அவசியம். உங்களது உடலில் சிறியதாக ஏதேனும் ஒரு பிரச்சனை வரப்போவதாக தோன்றினால் கூட மருத்துவரை அணுகி பரிசோதித்துக் கொள்வது நல்லது. உடல் நலத்திற்கு நன்மையை தரக்கூடிய உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது.
சனிபகவான் ஆறாவது இடமான சுகவீன ஸ்தானத்திற்கு வருவதால் உயிருக்கு எந்த ஆபத்தும் வராது. அனைத்திலும் வெற்றியை காண்பவராகவும் அதேசமயம் உடல் நலத்தில் மட்டும் சற்று கவனம் செலுத்த வேண்டியதாகவும் இருக்கும்.

அசிங்கமான கால் பாத வெடிப்பை மறைய வைக்கும் சூப்பர் க்ரீம்!! இதற்கு வெறும் 2 பொருள் இருந்தால் போதும்!!

PCOS பிரச்சனையால் உடல் எடை கூடிவிட்டதா? ஒரு மாதத்தில் எதிர்பார்த்த வெயிட் குறைய.. டயட் பிளானை இப்படி செட் பண்ணுங்க!!