நாட்டின் தொழில்முனைவோர் மேம்படுத்துவதற்காக P.M.M.Y எனப்படும் பிரதம மந்திரி முத்ரா யோஜனா எனும் திட்டத்தின் கீழ் கடன் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் மூன்று பிரிவுகளின் கடன் வழங்கப்படுகிறது.
1)சிசூ
2)கிஷோர்
3)தருண்
இந்த பிரிவுக்கு இதுவரை ரூ.10 லட்சம் வழங்கப்பட்டு வந்தது. மேலும் அரசு தற்போது புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் ‘தருண் பிளஸ்” எனும் இன்னொரு பிரிவின் மூலமாக, தருண் பிரிவின் கீழ் கடனை பெற்று முறையாக திருப்பிச் செலுத்திய தொழில்முனைவோருக்கு கூடுதலாக ரூ.10 லட்சம் கடன் கிடைக்க வாய்ப்பு செய்யப்பட்டுயுள்ளது. மேலும் முத்ரா யோஜனா திட்டத்தின் கடன் வரம்பு இரண்டு மடங்காக உயர்த்தி ரூ.20 லட்சம்மாக அதிகரித்துள்ளது.
இந்த திட்டம் மூலமாக பல லட்சம் தொழில் செய்பவர்கள் பயன் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் குறையும். தற்பொழுது இந்த திட்டத்துக்கு நல்ல வரவேற்ப்பு பெற்றுள்ளது.