ZIKA Vairus: தற்பொழுது பருவ மழைக்காலம் என்பதால் கொசுக்கள் மூலம் டெங்கு,மலேரியா,சிக்கன் குனியா,ஜிகா உள்ளிட்ட தொற்று பாதிப்புகள் அதிகளவு பரவி வருகிறது.இதில் வெப்பமண்டல நோயாக கருதப்படும் ஜிகா ஆசியா,அமெரிக்கா உள்ளிட்ட இடங்களில் அதிகளவு காணப்படுகிறது.
டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் தான் ஜிகா வைரஸையும் பரப்புகிறது.இந்த வைரஸ் தொற்றுக்கு தடுப்பூசியோ,சிகிச்சையோ கிடையாது.கொசுக்கள் கடிக்காமல் பார்த்துக் கொள்வதே இந்நோய் தொற்றில் இருந்து தப்பிக்கே ஒரே வழியாக உள்ளது.ஜிகா வைரஸ் கர்ப்பிணி பெண்களை அதிகளவு பாதிக்க கூடியவை என்பதனால் கருவுற்ற பெண்கள் கொசுக்கள் கடிக்காமல் தங்களை காத்துக் வேண்டும்.
மேலும் ஜிகா வைரஸ் இரத்த மாற்றம்,உடலுறவு,உறுப்பு மாற்று சிகிச்சை மூலம் பரவக் கூடும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.முதன் முதலில் கடந்த ஜூன் மாதம் மகாராஷ்டிராவின் புனேவில் இருவருக்கு இந்த ஜிகா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது.அதன் பிறகு வைரஸின் தாக்கம் அதிகரிக்க தொடங்கிய தற்பொழுது அண்டை மாநிலம் கர்நாடகாவில் 5 பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது.
ஜிகா வைரஸ் அறிகுறிகள்:-
1)தலைவலி
2)மூட்டு வலி
3)காய்ச்சல்
4)உடலில் சிவப்பு நிற தடிப்புகள்
5)கை,கால் வீக்கம்
6)உடல் சோர்வு
7)வாந்தி
ஜிகா வைரஸ் தொற்றில் இருந்து காத்துக் கொள்ளும் வழிமுறைகள்:
வீட்டை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
மாலை நேரத்தில் கதவு,ஜன்னலை மூடி வைக்க வேண்டும்.தண்ணீர் தொட்டிகளை மூடி வைக்க வேண்டும்.
பகல் நேரத்தில் தான் ஏடிஸ் கொசுக்கள் கடிக்கின்றன.எனவே பகல் நேரத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.
கொசுக்கள் கடிக்காமல் இருக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை சருமத்திற்கு பயன்படுத்தலாம்.