நீங்கள் புத்திசாலியாக இருந்தால்.. தியேட்டரை விட்டு வெளியேறுங்கள்!! இயக்குனர் உபேந்திரா!!

Photo of author

By Gayathri

இயக்குனர் உபேந்திராவால் திரைக்கதை எழுதி இயக்கப்பட்ட திரைப்படம் தான் Ui. அதுமட்டுமின்றி திரைப்படத்தில் இவர், ரீஷ்மா நானையா , முரளி ஷர்மா , சன்னி லியோன் , ஜிஷு சென்குப்தா , நிதி சுப்பையா , சாது கோகிலா , முரளி கிருஷ்ணா மற்றும் இந்திரஜித் கிருஷ்ணா ஆகியோருடன் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்.

எப்பொழுதும் தன்னுடைய கதையில் மற்றும் தன்னுடைய படத்தினை புரட்சியினை அல்லது ஒரு வித வித்தியாசத்தினை காட்ட நினைக்கும் இயக்குனர் உபேந்திரா இந்த திரைப்படத்திலும் டைட்டில் கார்டில் புதிய விதமான அணுகு முறையை மேற்கொண்டு இருக்கிறார்.

பான் இந்தியா திரைப்படம் ஆக அமைந்துள்ள Ui படத்தின் டைட்டில் கார்டில் இடம்பெற்றிருந்த வாசகத்தால் ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

டிசம்பர் 20 அன்று விடுதலை பாகம் 2 மற்றும் முபாஷா திரைப்படத்துடன் திரைக்கு வந்த கன்னட மொழி படம் தான் Ui. இந்த படத்தின் டைட்டில் கார்டில் தனித்துவமான கேப்ஷன் ஒன்று இடம்பெற்று இருக்கிறது. அது, ” நீங்கள் புத்திசாலியாக இருந்தால் தியேட்டரை விட்டு வெளியேறுங்கள் ” என்பதாகும். இதனைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனை ரசிகர்கள் பலரும் தங்களுடைய வலைதள பக்கங்களில் பகிர்ந்து, உபேந்திரா எப்போதுமே Unique என்றும், வித்தியாசமாக படமெடுப்பவர் என பாராட்டியும், ஒரு சிலர் எதிராகவும் விமர்சித்து வருகின்றனர்.