இந்த நாளில் பர்ஸ் வாங்கினால் உங்கள் பர்ஸில் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்!! ட்ரை செய்து பாருங்கள்!!

Photo of author

By Divya

இந்த நாளில் பர்ஸ் வாங்கினால் உங்கள் பர்ஸில் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்!! ட்ரை செய்து பாருங்கள்!!

உங்கள் பர்ஸில் பணம் சேர்ந்து கொண்டே இருக்கவும், செலவுகள் போக மீதம் இருந்து கொண்டே இருக்கவும் இப்படி செய்யுங்கள்.

நீங்கள் பிறந்த நட்சத்திரத்தில் இருந்து 6வது நாள் வரும் நட்சத்திரத்தன்று சுக்ரஹோரையில் அல்லது குரு ஹோரையில் பர்ஸ் வாங்கவும்.

உதாரணத்திற்கு:-

அஸ்வினியில் பிறந்தால் திருவாதிரை அன்று வாங்கவும். மெரூன், சிவப்பு, பச்சை – இந்த ஷேட் உள்ள நிறங்கள் பணத்தை ஈர்க்கக்கூடியவை.

அதன் பின், சிறிது பன்னீரில் மஞ்சள் தூள் கலந்து லேசாக பர்ஸ் மீது தெளித்து அதன் பின் வெள்ளிக்கிழமை காலை 6-7 மணிக்குள் இந்த பொருட்களை ஒரு சிறிய கவரில் போட்டு உள்ளே வைத்து ஸ்டேபிள் செய்யவும். பின்பு, ஒரு ஊசி வைத்து அந்த நேர்மறை ஆற்றல் பர்ஸில் பரவ அங்கங்கு கவரில் குத்தி விடவும்.

போட வேண்டிய பொருட்கள்: ஒரு ஏலக்காய், ஒரு சிறிய வெள்ளி நாணயம், ஒரு கிராம்பு, ஒரு துண்டு பச்சை கற்பூரம், சிறிது பச்சரிசி.

அதன் பின் பர்ஸில் ரூபாய் நோட்டை வைக்கவும். காலையில் எவ்வளவு பணம் வைக்கின்றோம் என்று எண்ணி மாலையில் மீதி எவ்வளவு இருக்கிறது என்று எண்ணி வைப்பது அவசியம்.

இது தான் சுக்ர பகவானை கவனிக்கிறோம் என்று அர்த்தம். அப்போது அவர் நம்மை கவனிப்பார் என்பது ஐதீகம். இவ்வாறு செய்வதன் மூலம் நம் பர்ஸில் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்.