இதை மட்டும் செஞ்சிட்டு வாங்க உங்களுக்கு அதிர்ஷ்டம் வீடு தேடி வரும் !!
சாளக்கிராமம் என்பது தெய்வீகம் நிறைந்த ஒரு கல் ஆகும். சாளக்கிராம கற்கள் விஷ்ணு பகவான் வாசம் செய்யக்கூடிய பொருள்களில் ஒன்றாகும். சாளக்கிராம கற்கள் எல்லோருக்கும் அவ்வளவு எளிதாக கிடைப்பதில்லை. கிடைப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள் என்று தான் சொல்ல வேண்டும். சாளக்கிராமத்தை யார் வேண்டுமானாலும் அதை தொட்டு வழிபடலாம். ஆனால் அதற்கு சுத்தமாக நாம் இருக்க வேண்டும். சாளக்கிராமம் வைத்து வழிபடுகிற வீட்டில் சகல இறைசக்திகளும் அருள் புரிவதாக அனைவரின் நம்பிக்கையாக உள்ளது.மேலும் சாளக்கிராமக்கல் பூஜை செய்யும் முறை பற்றி நாம் காண்போம்.
சாளக்கிராம பூஜை செய்வது மிகவும் எளிதானது. குளித்து முடித்து தூய ஆடை அணிந்து பக்தியுடன் சாளக்கிராமத்தை எடுத்து சிறிய அளவில் அபிஷேகம் செய்து ஊதுபத்தி அதற்கு காட்டி இனிப்பை நெய் வேத்தியமாக படைத்து வழிபடலாம். மேலும் துளசி இலை சமர்ப்பித்து வழிபாடு செய்வது சிறப்பை தரும். சாளக்கிராமத்துக்கு அபிஷேகம் செய்த நீரை தலையில் தெளித்து கொண்டால் அனைத்து விதமான கஷ்டங்களும் ஓடி போகும் என்பது நம்பிக்கை.
பொதுவாக விக்கிரகங்கள் சேதம் அடைந்துவிட்டால், அதை நீர்நிலைகளில் சேர்த்து விடுவார்கள். அதற்கு பதிலாக வேறு விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்து வழிபடுவது வழக்கம். ஆனால் சாளக்கிராம கற்கள் பின்னப்பட்டிருந்தாலோ அல்லது விரிசல்கள் இருந்தாலோ அதை செப்பு, வெள்ளி கம்பிகள் வைத்து கட்டி மீண்டும் பூஜைக்கு பயன்படுத்தலாம். அபிஷேகமும் ஆராதனைகளும் செய்யலாம். வீட்டில் ஆண்களும், பெண்களும் தினமும் சாளக்கிராமத்தை பூஜிக்க வேண்டும். அவ்வாறு செய்வதால் நமக்கு கிடைக்கும் பலன்கள்,சாளக்கிராமத்திற்கு தினமும் பூஜை செய்து வழிபட்டு வந்தால் மனம் தெளிவடையும்.சாளக்கிராமம் இருக்கும் இடம் இறைவன் இருக்கும் இடத்திற்கு சமமானது.
சாளக்கிராமத்திற்கு பூஜை செய்தால் யோகமும், தானமும் செய்த பலன் கிடைக்கும். சாளக்கிராம கற்கள் இருக்குமிடத்தில் சகல இறைசக்திகளும் நித்திய வாசம் செய்வதாக ஐதீகம். சகல செல்வங்களும் பரிபூரண விருத்தியாகும்.சாளக்கிராம பூஜை செய்பவர்களின் உள்ளம் தூய்மையாகும்.அதனால் தொழிலிலும், வியாபாரத்திலும் அதிக விருத்தி உண்டாகும்.
சாளக்கிராமத்தை நினைத்தாலும், தரிசித்தாலும், பூஜை செய்து வணங்கி வந்தாலும் ஒருவர் செய்த முன்ஜென்ம பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.