கை கால் வலி தாங்க முடியவில்லையா நல்லெண்ணெயுடன் மருதாணியை இப்படி பயன்படுத்துங்க ஆயுசுக்கும் இனி பிரச்சனை இல்லை!! 

Photo of author

By Sakthi

கை கால் வலி தாங்க முடியவில்லையா நல்லெண்ணெயுடன் மருதாணியை இப்படி பயன்படுத்துங்க ஆயுசுக்கும் இனி பிரச்சனை இல்லை!!
தற்பொழுது அனைவரும் கடுமையான வேலை செய்து வருகின்றோம். அதிலும் குடும்பத்தில் உள்ள பெண்கள் நாள் முழுவதும் வாரம் முழுவதும் வேலை செய்கின்றனர். இதனால் வேலை செய்யும் பெண்களுக்கும் சரி ஆண்களுக்கும் சரி கை வலி மற்றும் கால் வலி ஏற்படும்.
கை மற்றும் கால் வலி ஏற்படும் பொழுது அனைவரும் செய்யும் ஒரே செயல் மாத்திரைகள் வாங்கிக் போஞுவது தான். வலி மாத்திரை வாங்கிப் போட்டால் வலி சரியாகும். ஆனால் மீண்டும் கை மற்றும் கால் வலி ஏற்படும். எனவே கை மற்றும் கால் வலி முற்றிலுமாக குணமாக என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அடுத்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்…
* மருதாணி இலைகள்
* நல்லெண்ணெய்
செய்முறை…
முதலில் அடுப்பை பற்ற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் ஒரு வாணலி அல்லது கடாய் வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் நல்லெண்ணெய் சேர்த்துக் கெள்ள வேண்டும். பின்னர் இதில் மருதாணி இலைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இதை நன்கு கொதிக்க வைக்க வேண்டும். நல்லெண்ணெய் நன்கு கொதிக்கும் பொழுது மருதாணி இலைகளின் சத்துக்கள் எண்ணெயில் இறங்கும். நன்கு கொதித்த பின்னர் அடுப்பை அணைத்து விடலாம். பின்னர் எண்ணெயை ஆற வைத்து கை மற்றும் கால் வலி இருக்கும் இடங்களில் தேய்க்க வேண்டும். இதை தொடர்ந்து செய்து வந்தால் கை மற்றும் கால் வலி ஏற்படாது.