முதலில் ஸ்டாலின் இப்பொழுது உதயநிதி! காக்கா பிடிக்கும் முயற்சி தீவிரம்!

Photo of author

By Sakthi

திருத்தணியில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வேலைகளில் பிடித்தது போல பழனியில் அவருடைய மகன் உதயநிதி ஸ்டாலின் வேல் பிடித்து இருக்கின்றார்.

பழனியில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற பரப்புரை பிரச்சாரக் கூட்டத்தில் திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற சமயத்தில் அவருக்கு திமுகவினர் வெள்ளி வேலை பரிசளித்து இருக்கிறார்கள். ஆகவே உதயநிதி ஸ்டாலின் கையில் வேலுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது.

இதுதொடர்பாக தமிழக பாஜக கலை மற்றும் கலாச்சார பிரிவு தலைவர் காயத்ரி ரகுராம் தன்னுடைய வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, நீங்கள் கருப்பர் கூட்டம் சேனல் தயார் செய்தீர்கள் கந்தசஷ்டி தொடர்பாக இழிவாக பேசி இருக்கிறீர்கள். ஆனால் இப்பொழுது நீங்கள் வேலை சுமந்து நிற்பதற்கு என்ன சம்பந்தம் இருக்கிறது சில தினங்களில் மேடையில் கந்த சஷ்டியை படிப்பீர்கள் என்று நான் நம்புகின்றேன் .இதெல்லாம் இறைவன் முருகன் மற்றும் இந்துக்களின் மிகப்பெரிய சக்தி நீங்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டால் உங்களை துரத்தி விடுவார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

ஆனால் திமுகவின் இது போன்ற தொடர்ச்சியான செயல்கள் தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி விஸ்வரூபம் எடுப்பதை காட்டுவதாக பரவலாக பேசிக்கொள்கிறார்கள்.