இதை மட்டும் நீங்கள் செய்து விட்டால் நீங்கள் தான் எதிர்க்கட்சித் துணைத் தலைவர்! பன்னீர் செல்வத்திற்கு சவால் விட்ட முன்னாள் அமைச்சர்!

Photo of author

By Sakthi

அதிமுகவில் அந்தக் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சமீபத்தில் நடைபெற்ற அந்தக் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த நிலையில் அந்த கட்சிக்கும் தலைமைக்கும் விரோதமாக செயல்பட்டதாக தெரிவித்து எதிர்க்கட்சித் துணைத் தலைவராக இருந்த பன்னீர்செல்வம் அவர்களை அந்த கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கி உத்தரவிட்டார் எடப்பாடி பழனிச்சாமி. அதோடு எதிர்க்கட்சித் துணைத் தலைவர் என்ற பதவியையும் அவரிடம் இருந்து பறித்து முன்னாள் அமைச்சர் உதயகுமாரிடம் வழங்கினார், கட்சியின் பொருளாளர் உள்ளிட்ட பதவியும் அவரிடமிருந்து பறிக்கப்பட்டது.

இந்த நிலையில் இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இன்னொரு புறம் பன்னீர்செல்வமும் சசிகலாவின் பக்கம் பேசி வருகிறார் ஆகவே தனக்கு ஒரு ஆதரவு கிடைத்துவிட்டது என்று சசிகலா மகிழ்ச்சியுடன் இருந்து வருகிறார். ஆனால் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான மர்மத்தை கண்டறிய அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம் சசிகலாவின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தது. இதன் காரணமாக சசிகலா பன்னீர்செல்வத்தின் மீது வருத்தத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் நடைபெற்ற அதிமுக பண்புடா ஆண்டு பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது காவல்துறை மானிய கோரிக்கையின் போது மாநிலத்தில் நடக்கும் கொலை மற்றும் கொள்ளை, கற்பழிப்பு, குற்ற சம்பவங்கள் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கேள்விகளை எழுப்பினார். அதற்கு முதலமைச்சரால் பதில் அளிக்க முடியவில்லை என்று கூறியிருக்கிறார்.

மேலும் அவர் பேசியதாவது எதிர்க்கட்சித் துணைத் தலைவர் யார் என்பதில் தற்போது போட்டியின் நிலவி வருகிறது ஆகையால் முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு நான் ஒரு சவால் விடுகிறேன். சட்டசபையில் ஒரே ஒரு நாள் தீய சக்தி கருணாநிதி இன்று ஒரு முறை பன்னீர்செல்வம் தெரிவித்துவிட்டால் அவருக்கு எதிர்க்கட்சித் துணைத் தலைவராக பதவி வழங்க நான் மனப்பூர்வமாக சம்மதிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் வெடிகுண்டு கலாச்சாரம் தலை தூக்குவது வாடிக்கையாக்கிவிட்டது என்றும் அவர் பேசியுள்ளார்.