மன வளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளை மூடி வைப்பதால் தான் அவர்களின் திறமை வெளிப்படுவதில்லை! ஆளுநர் ஆர். என். ரவி!

0
88

இந்தியாவில் பாஜக ஆளாத மாநிலத்தில் மத்திய அரசால் நியமிக்கப்படும் பிரதிநிதியான ஆளுநர் எதிர்க்கட்சித் தலைவரைப் போல செயல்படுகிறார் என்ற விமர்சனம் சமீப காலமாக முன்வைக்கப்படுகிறது.

அதற்கேற்றார் போல தமிழக ஆளுநர் ஆர் என் ரவி பல்வேறு கருத்துக்களை தெரிவித்து அவ்வபோது விமர்சனத்திற்கு உள்ளாகிறார். அதோடு பல்கலைக்கழக துணை வேந்தர்களை ஆளுநர் தான் நியமிக்க வேண்டும் என்ற விதிமுறைக்கு எதிராக சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் புதிய சட்ட முன் வடிவம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் மயிலம் அடுத்த குமணமங்கலத்தில் இருக்கின்ற மனவளர்ச்சி ஒன்றிய குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளியின் புதிய கட்டட திறப்பு விழாவில் மாற்றுத்திறனாளிகள் 12 பேருக்கு பணி நியமன ஆணையை வழங்கி தமிழக ஆளுநர் ரவி உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது கோணமங்கலம் தனியார் அறக்கட்டளை சார்பாக மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்வதை பார்க்க வேண்டும் என்று தெரிவித்தேன் அவர்கள் எனக்கு அழைப்பு விடுக்காவிட்டாலும் சமுதாயத்திற்காக அவர்கள் செய்யும் மகத்தான பணிகளை பார்க்க நானே என்னுடைய விருப்பத்தின் பேரில் வர விரும்புவதாக சிருஷ்டி பவுண்டேஷன் நிர்வாகத்திடம் கூறினேன்.

மனதாலும் உடலளவிலும் பாதிக்கப்பட்டவர்களை சமூகத்தில் தனியாக ஒதுக்கி வைத்து விடக்கூடாது அவர்களுக்கு தங்களால் இயன்ற உதவியை சேவை மனப்பான்மையுடன் நாம் எல்லோரும் முன்னின்று செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

அதோடு தொண்டு செய்வது என்பது மகத்தான பணி அமெரிக்காவில் இட்ட நாடுகளில் மனவளர்ச்சி ஒன்றிய அவர்கள் 50 குழந்தைகளுக்கு ஒருவர் இருக்கிறார்கள். ஆனால் இந்த பாதிப்பு தேசிய அளவில் குறைவாகவே காணப்படுகிறது.

இதில் அரசு சேவை மனப்பான்மையுடன் செயல்பட்டாலும் இதற்காக தனியாக கவனம் செலுத்த இயலாமல் இருந்து வருகிறது. இப்படிப்பட்டவர்களுக்கு சமுதாயப் பணியில் சேவை மனப்பான்மை என்பது மகத்தான விஷயம் என்று தெரிவித்துள்ளார்.

நம்முடைய நாட்டின் பழமையான கலாச்சாரம் பாரம்பரியம் நிறைந்த தமிழகத்தில் சேவை மனப்பான்மையுடன் மக்கள் தொண்டு செய்து வருவது பெருமையாக இருக்கிறது.

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை பெற்றோர்கள் வெளியே காண்பிக்காமல் மூடி மறைக்கின்றனர் ஆகவே மனவளர்ச்சி கொன்றிய மாற்றுத்திறனாளிகளின் திறமை வெளிப்படையாக யாருக்கும் தெரிவதில்லை என்று குறிப்பிட்டுள்ளார் ஆளுநர்.

இவர்களைத் தொண்டு நிறுவனங்கள் தத்தெடுத்து அவர்களுக்கு கல்வி வேலைவாய்ப்பை உண்டாக்கி தருவது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது என்று அந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி உரையாற்றினார்.