இந்து மக்கள் தங்களது வீடுகளில் கடவுளுக்கு பூஜை செய்து வணங்குவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.ஆனால் இன்றைய காலகட்டத்தில் நேரமின்மை காரணமாக சாமி கும்பிடுவதில் இருந்து பூஜை செய்வது வரை அனைத்தையும் அரக்க பறக்கத்தான் செய்து வருகிறார்கள்.
கடமைக்கு பூஜை செய்தால் கடவுளின் அருள் பரிபூரணமாக கிடைக்காது.கடவுளை வீட்டிற்கு அழைப்பதற்காக தான் வீட்டில் பூஜை செய்கிறார்கள்.ஆனால் இன்று பூஜை செய்யும் விதிமுறைகளை பலரும் மறந்துவிட்டார்கள்.
வேதங்களின் படி பூஜையை சரியாக செய்தால் மட்டுமே கடவுளின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.நீங்கள் வீட்டில் இருக்கின்ற சிலைக்கு பூஜை செய்து வந்தால் மட்டுமே அதற்கு தெய்வத்தன்மை கிடைக்கும்.ஆனால் இன்று கடவுளை வணங்க இரண்டு நிமிடங்கள் கூட ஒதுக்க முடியாத இயந்திர உலகில் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றோம்.
இனியாவது வீட்டு பூஜை அறையை பராமரித்து கடவுளை வணங்குவது குறித்து அனைவரும் அறிந்து வைத்திருக்க வேண்டும். முதலில் வீட்டை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.கோயிலில் அபிஷேகம் செய்வது போன்று நமது வீட்டில் உள்ள கடவுள் சிலைக்கும் பூஜை செய்து வந்தால் எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும்.
வீட்டு நிலவு வாசலை பன்னீர் கொண்டு துடைத்து மஞ்சள் குங்குமத்தில் பொட்டு வைத்து வழிபட்டு வந்தால் வீட்டில் தெய்வ கடாச்சம் அதிகமாகும்.பூஜை அறையில் மாவிலை தோரணம் கட்டி மாலையால் அலங்கரிக்க வேண்டும்.
வீட்டு பூஜை அறையில் இருக்கின்ற கடவுள்களுக்கு உகந்த மலர்களை வைத்து அலங்காரம் செய்து பூஜை செய்தால் அதிக பலன்கள் கிடைக்கும்.தினமும் காலை மற்றும் மாலை விளக்கேற்றி தூபம் போட்டால் கடவுளின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.