இதை செய்தால் இந்த வியாதி தான் வரும்.. அட இது தெரிந்தால் சாப்பிடும் போது 1 வார்த்தை கூட பேச மாட்டிடீர்கள்!! 

Photo of author

By Divya

உங்களில் பலருக்கு சாப்பிடும் போது பேசக் கூடிய பழக்கம் இருக்கும்.ஆனால் நம் முன்னோர்கள் வழக்கப்படி சாப்பிடும் நேரத்தில் பேசக் கூடாது.இது சாதாரண விஷயம் அல்ல.நம் முன்னோர்கள் கூறியதற்கு பின்னால் ஆச்சர்யம் அளிக்கும் ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.

சாப்பிடும் போது அதிகம் பேசுவதால் ஜீரணிப்பதற்கான ஆற்றல் குறைகிறது.இதனால் கடுமையான செரிமானப் பிரச்சனை ஏற்படுகிறது.இதனால் வாயுத் தொல்லை ஏற்படக் கூடும்.சாப்பிடும் போது பேசுவதால் அதிகமான காற்று உடலுக்குள் சென்று வயிறு உப்பசம்,வாயுத் தொல்லை போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.இதன் காரணமாகவே சாப்பிடும் போது பேசக் கூடாது என்று முன்னோர்கள் கூறுகின்றனர்.

வாயுத் தொல்லை நீங்க சில வீட்டு வைத்தியங்கள்:

1)துளசி
2)இஞ்சி

மிக்ஸி ஜாரில் 10 துளசி இலைகள் மற்றும் ஒரு துண்டு தோல் நீக்கிய இஞ்சி சேர்த்து அரைத்து சாறு எடுத்து பருகினால் வாயுத் தொல்லை நீங்கும்.

1)சுக்கு
2)கொத்தமல்லி விதை

ஒரு பாத்திரத்தில் 150 மில்லி தண்ணீர் சூடுபடுத்தவும்.பிறகு ஒரு துண்டு சுக்கு மற்றும் ஒரு தேக்கரண்டி கொத்தமல்லி விதை சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் வாயுத் தொல்லை நீங்கும்.

1)சீரகம்
2)தண்ணீர்

ஒரு பாத்திரத்தில் 200 மில்லி தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வந்தால் வாயுத் தொல்லை நீங்கும்.

1)பூண்டு
2)தேன்

ஒரு பல் பூண்டை இடித்து பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும்.பிறகு அதில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து வடிகட்டி தேன் சேர்த்து அருந்தினால் வயிற்றில் தேங்கிய வாயுக்கள் முழுமையாக வெளியேறும்.