இந்த நேரத்திற்குள் வரவில்லை என்றால் அரை நாள் சம்பளம் கிடையாது!! அரசு ஊழியர்களுக்கு வந்த அலர்ட்!!
மத்திய அரசின் பணியாளர் நலத்துறை அமைச்சகமானது மத்திய அரசு ஊழியர்களுக்கு அலுவலங்கள் வருவதற்கான நேர கட்டுப்பாட்டை அறிவித்திருக்கிறது.மத்திய அரசு அலுவலகங்கள் காலை 9 மணி தொடங்கி மாலை 5:30 மணி வரை செயல்படுவது வழக்கம்.ஆனால் சில ஊழியர்கள் காலையில் உரிய நேரத்திற்கு அலுவலகம் வருவதில்லை என்றும் மாலை வேலை நேரம் முடிவதற்கு முன்னரே சென்று விடுகின்றனர் என்ற புகார் எழுந்த வண்ணம் உள்ளது.
கொரோனா காலத்திற்கு பிறகு மத்திய அரசு அலுவலகங்களில் பயோமெட்ரிக் வருகைப்பதிவு பயன்படுத்தவது குறைந்திருக்கிறது.இதனால் ஊழியர்கள் அலுவலகங்களுக்கு நேரம் கடந்து வருவதாக சொல்லப்படுகிறது.இந்நிலையில் அலுவலகங்களில் பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறையை அனைத்து ஊழியர்களும் பயன்படுத்த வேண்டுமென்று பணியாளர் நலத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியிருக்கிறது.
மேலும் ஊழியர்கள் காலை 9:15க்குள் அலுவலகத்திற்குள் இருக்க வேண்டுமென்றும் கால தாமதம் ஏற்பட்டால் அரை நாள் சாதாரண விடுப்பு கணக்கில் சேர்க்கப்பட்டுவிடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக பணியாளர் நலத்துறை அமைச்சகம் மத்திய அரசு அலுவலகங்களுக்கு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஊழியர்கள் காலை 9.15 மணிக்குள் பணிக்கு வர வேண்டும். அந்த நேரத்துக்குள் வராத பட்சத்தில் அரை நாள் சாதாரண விடுப்பு கழிக்கப்படும்.ஊழியர் ஒரு குறிப்பிட்ட நாளில் அலுவலகத்திற்கு வர முடியாவிட்டால், அதை முன் கூட்டியே தெரிவிக்க வேண்டும் மற்றும் சாதாரண விடுப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும்.மூத்த அதிகாரிகள் உட்பட அனைத்து ஊழியர்களும் பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறையைப் பயன்படுத்த வேண்டும்.அதிகாரிகள் தங்கள் பிரிவுகளில் பணிபுரியும் ஊழியர்களின் வருகை மற்றும் நேரமின்மையை கண்காணிப்பார்கள்.