இதை மட்டும் செய்யாவிட்டால் ரேஷன் பொருட்கள் முதல் உரிமைத்தொகை வரை எதுவும் கிடைக்காது!!

Photo of author

By Janani

இதை மட்டும் செய்யாவிட்டால் ரேஷன் பொருட்கள் முதல் உரிமைத்தொகை வரை எதுவும் கிடைக்காது!!

இந்திய முழுவதும் உள்ள மக்கள் அனைவருக்கும் பொது விநியோக திட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.இதனால் ஏழை,நடுத்தர குடும்பங்கள் பெரிதும் பயன் அடைந்துள்ளனர்.அதுமட்டுமில்லாமல் மானிய விலையில் மிக குறைந்த கட்டணத்தில் மளிகை பொருட்கள் விற்கப்படுகின்றன.தமிழ்நாட்டிலும் இந்த பொது விநியோக திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

அந்த வகையில் தற்பொழுது தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அதாவது ஆதார் எண்ணை குடும்ப அட்டையுடன் இணைப்பதை கட்டாயமாக்கி உள்ளது.இதற்கு மூன்று விதமான வழிகளை அரசு ஏற்படுத்தி கொடுத்துள்ளது.அவை 1.ஆன்லைன் நடைமுறை 2.ஆஃப்லைன் நடைமுறை மற்றும் 3. TNEPDS மொபைல் ஆப் இந்த முறைகளின் மூலம் நாம் ஆதார் அட்டையை எளிதில் ரேஷன் கார்டுடன் சேர்த்து கொள்ளலாம்.

ஆன்லைன் வழியாக பதிவு செய்வதற்கு TNEPDS என்ற இணைய தள முகவரியில் சென்று அங்குள்ள ஆதார்,ரேஷன் கார்டு இணைப்பு பட்டனை கிளிக் செய்து அதில் குடும்ப அட்டையில் உள்ள எண்ணை நிரப்பவும்,பின் உங்களது பெயரை தேர்ந்தெடுத்து அதில் உங்களின் ஆதார் எண்ணை உள்ளீடு செய்யவும் பின் OTP அல்லது கைரேகை மூலம் அதனை சரிபார்க்கவும்.இப்பொழுது ஆதாரனாது ரேஷன் கார்டுடன் இணைக்கப்பட்டு விடும்.

இதுவே, ஆஃப்லைன் என்பது நாம் ரேஷன் கடைகளுக்கு நேரில் சென்று ஆதார் கார்டின் ஜெராக்ஸ் காப்பியை கொடுத்தால் அவர்களே பதிவு செய்து கொடுப்பார்கள்.இந்த முறையில் பயோமெட்ரிக் இயந்திரத்தில் கை ரேகை பெறப்பட்டு அதன் மூலம் தான் ஆதார் எண் சேர்க்கப்படும்.

அடுத்ததாக மொபைல் போனில் உள்ள play store-ல் TNePDS இந்த ஆப்பை download செய்து,ஆன்லைன் பதிவில் செய்த அதே வழிமுறைகளை பின்பற்றி நாமே,குடும்ப அட்டையுடன் ஆதாரை இணைத்துக் கொள்ளலாம்.

மேற்க்கண்ட இந்த செயல் முறைகளை பயன்படுத்தி ஆதாரை இணைக்கமால் இருந்தால் கலைஞர் உரிமை,போன்ற அரசால் வழங்கப்படும் எந்த ஒரு திட்டமும் சரி வர கிடைக்க முடியாமல் போகக் கூடிய சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது எனக் கூறப்படுகிறது.