
Ration Card: தமிழகத்தில் ரேஷன் அட்டை மூலம் அனைவருக்கும் மலிவு விலையில் அரிசி பருப்பு சர்க்கரை போன்றவை வழங்கப்பட்டு வருகிறது. அதிலும் பிரியாரிட்டி ஹவுஸ் ஓல்டு அதாவது (PHH) மற்றும் ஆன்டியோதயா அன்னை யோஜனா அதாவது (AYY) கார்டு வைத்திருந்தால் கூடுதல் சலுகைகள். இவர்கள் அனைவரும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளதால் 35 கிலோ அரிசி குறைந்த விலையில் கொடுக்கப்பட்டு வருகிறது. இதுவே நான் பிரியாரிட்டி ஹவுஸ் ஓல்டு அதாவது ( NPHH) கால் வைத்திருந்தால் குறைந்த அளவில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இதில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் வைத்திருக்கும் ரேஷன் அட்டையில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தங்களது கைரேகையை பதிவு செய்ய வேண்டும் என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. ஆனால் இதற்கென்று கால வரையறை ஏதும் குறிப்பிடவில்லை. மாறாக கைரேகை கட்டாயம் என்று தெரிவித்திருந்தனர். இந்த செய்தியை வைத்து பலரும் தற்போது பொய் தகவலை பரப்பி வருகின்றனர். இம்மாதம் இறுதிக்குள் கைரேகையை பதிவு செய்ய விடில் கட்டாயம் ரேஷன் அட்டை செல்லுபடி ஆகாது எனக் கூறியுள்ளனர்.
தற்போது இது ரீதியாக தமிழக அரசு பொதுஅறிவை போன்ற வெளியிட்டுள்ளது. வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் கைரேகை பதிவு கட்டாயம் தான். ஆனால் அதற்கென்று எந்த ஒரு காலம் வரையரையும் நாங்கள் சொல்லவில்லை என தெரிவித்துள்ளனர். இந்த பொய் தகவலை யாரும் நம்ப வேண்டாம் என்றும் கூறியுள்ளனர். இதனால் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு அடைந்துள்ளனர்.