ரேஷன் கார்டுடன் இதை இணைக்காவிட்டால் அரசு சலுகைகள் எதுவும் கிடைக்காது!! இது தான் கடைசி தேதி!!

Photo of author

By Rupa

 

ரேஷன் கார்டுடன் இணையும் ஆதார் கார்டு.அரசு வேலைகளுக்கு நேரடியாக பயன் படுத்தும் ரேஷன் கார்டு மற்றும் ஆதார் கார்டுகளை கொண்டு பலரும் பயனடைந்து வருகின்றனர்.தனித்தனியாக பயன் படுத்தி வரும் ரேஷன்  கார்டு மற்றும் ஆதார் கார்டு இரண்டையும் ஒன்றரக இணைக்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ளது. இரண்டையும் ஒன்றாக இணைப்பதன்  மூலம் அரசு மற்றும் மத்திய அரசு சார்ந்த பணம் மற்றும் பல்வேறு சலுகைகளையும் பெறலாம்.

ரேஷன் மற்றும் ஆதார் கார்டு இணைக்க தவறினால் மாதம் மகளிர்களுக்கு வரும் உரிமைத்தொகை போன்ற திட்டங்களை பெற முடியாமல் போகலாம். இதனை இணைக்க ஆன்லைனில் பதிவு செய்ய தாமதமானால் ஆருகில் உள்ள ரேஷன் கடைகளில் பையோமெட்ரிக்  இயந்திரத்தினம் மூலம் இணைக்கலாம்.இதன்மூலம் மோசடிகல் தடுக்க முடியும்.ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கு பொருட்கள் கிடைக்கும்.

இந்த  நன்மை அடிப்படையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.ரேஷன் கார்டு மற்றும் ஆதார் கார்டு இணைக்கும் கடைசி தேதியாக செப்டம்பர் 30.2024 அறிவிக்கப்பட்டுள்ளது.ஆன்லைன் மூலமும் பதிவு செய்யலாம்.நேரடியாக ரேஷன் கடைக்குசென்று  பதிவு செய்யலாம்.மேற்கொண்டு  TNEPDS மொபைல் app கொண்டு பதிவு செய்யலாம்.TNEPDS இன் அதிகாரப்பூர்வமான இணையத்தில் உள்ளே சென்று   முகப்பு படத்தில்  கொடுக்கப்பட்டுள்ள ஆதார் ரேஷன் இணைப்பை கிளிக் செய்யும்போது உங்களுடைய ரேஷன் கார்டு எண்ணை  உள்ளிட வேண்டும்.

பின்பு  குடும்ப அட்டையில் உங்கள் பெயரை தேர்வு செய்து  உங்கள் ஆதார் எண்ணை கொண்டு OTP அல்லது கைரேகை கொண்டு சரிப்பார்க்கலாம் .இப்போது ஆதார் கார்டு ரேஷன் கார்டுடன் இணைந்துவிடும்.