கொழுப்பை கரைக்க ஓமம் வாட்டரை இப்படி குடித்தால்  15 நாட்களுக்கு  உடல் எடை சர சரன்னு குறையும்!!

Photo of author

By Rupa

கொழுப்பை கரைக்க ஓமம் வாட்டரை இப்படி குடித்தால்  15 நாட்களுக்கு  உடல் எடை சர சரன்னு குறையும்!!

உடலில் தேவைக்கு அதிகமாக கொழுப்பு தேங்கி இருந்தால் அவை ஆபத்தான நோய் பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.எனவே உடலில் தேங்கி இருக்கும் கெட்ட கொழுப்புகள் கரைந்து உடல் கட்டுக்கோப்பாக இருக்க தினமும் ஓமம் தண்ணீர் குடியுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)ஓமம்
2)தண்ணீர்
3)தேன்

செய்முறை:-

ஒரு கிண்ணத்தில் அரை தேக்கரண்டி ஓமம் சேர்த்து தண்ணீர் ஊற்றி ஒரு இரவு ஊறவிடவும்.மறுநாள் இதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.

ஐந்து நிமிடங்களுக்கு மிதமான தீயில் கொதிக்கவிட்டு அடுப்பை அணைக்கவும்.பிறகு இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி சிறிது தேன் சேர்த்து கலக்கி பருகி வந்தால் உடல் எடை சர சரவென்று குறைந்துவிடும்.

தேவையான பொருட்கள்:-

1)கொள்ளு
2)சீரகம்
3)உப்பு

செய்முறை:-

ஒரு காடாயில் ஒரு தேக்கரண்டி கொள்ளு சேர்த்து குறைவான தீயில் வாசனை வரும் வரை வறுத்தெடுத்துக் கொள்ளவும்.

பிறகு இதை ஆறவிட்டு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பவுடராக்கி கொள்ளவும்.அடுத்து ஒரு பாத்திரத்தில் 200 மில்லி தண்ணீர் ஊற்றி அரைத்த கொள்ளுப்பொடி சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.

அதன் பின்னர் 1/4 தேக்கரண்டி சீரகத்தை போட்டு மிதமான தீயில் கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.இந்த பானத்தை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி சிட்டிகை அளவு உப்பு சேர்த்து பருகி வந்தால் உடலிலுள்ள கெட்ட கொழுப்புகள் முழுமையாக நீங்கிவிடும்.

தேவையான பொருட்கள்:-

1)கருஞ்சீரகம்
2)தேன்

செய்முறை:-

1/4 தேக்கரண்டி கருஞ்சீரகத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.பிறகு இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி சிறிது தேன் சேர்த்து குடித்து வந்தால் உடல் எடை வேகமாக குறைந்துவிடும்.