இந்த பொடி சாப்பிட்டால்.. உங்கள் தலையில் ஒரு வெள்ளைமுடி கூட இருக்காது!!

Photo of author

By Divya

இந்த பொடி சாப்பிட்டால்.. உங்கள் தலையில் ஒரு வெள்ளைமுடி கூட இருக்காது!!

Divya

தற்பொழுது வெள்ளைமுடி பாதிப்பை வயது பேதமின்றி அனைவரும் சந்தித்து வருகின்றனர்.மோசமான வாழ்க்கைமுறையால் உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது.தலைமுடியை பராமரிக்க தவறுவதால் தலைமுடி இளம் வயதிலேயே வெள்ளையாகிவிடுகிறது.

இளம் வயது நரைமுடியை கருப்பாக மாற்ற ஹேர் டை பயன்படுத்துவதை பலரும் வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.ஆனால் கெமிக்கல் ஹேர் டை பயன்படுத்தினால் தலைமுடி உதிர்வு ஏற்படும்.கெமிக்கல் ஹேர் டை சீக்கிரம் முடியை கருமையாக மாற்றும் என்றாலும் தலைமுடி ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுவிடும்.அதேபோல் சில சரும பிரச்சனைகளும் ஏற்படும்.எனவே கெமிக்கல் ஹேர் டைக்கு மாற்று இயற்கை பொருட்களை கொண்டு டை அல்லது ஆயில் தயாரித்து பயன்படுத்தலாம்.

அதேபோல் நாம் சாப்பிடும் உணவுகள் மூலமும் நரைமுடியை கருப்பாக மாற்றலாம்.கரிசலாங்கண்ணி கீரையை பொடித்து சாப்பிட்டு வந்தால் வெள்ளை முடி கருமையாக மாறும்.தினமும் காலையில் ஒரு தேக்கரண்டி கரிசலாங்கண்ணி கீரை பொடி சாப்பிட்டால் வெள்ளை முடி கருப்பாக மாறும்.

அதேபோல் 100 கிராம் நெல்லிக்காய் வற்றலை பவுடர் பதத்திற்கு அரைத்து ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் வெள்ளை முடி கருமையாக மாறும்.

வெள்ளை முடியை கருமையாக மாற்றும் மூலிகை பானம் தயாரிக்கும் முறை:

1)கரிசலாங்கண்ணி கீரை பொடி – ஒரு தேக்கரண்டி
2)பெரிய நெல்லிக்காய் பொடி – ஒரு தேக்கரண்டி
3)தண்ணீர் – ஒரு கிளாஸ்

பாத்திரம் ஒன்றில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பின்னர் அதில் ஒரு தேக்கரண்டி கரிசலாங்கண்ணி பொடி,ஒரு தேக்கரண்டி பெரிய நெல்லிக்காய் பொடி போட்டு கலந்துவிட வேண்டும்.பானம் நன்றாக கொதித்து வந்த பின்னர் கிளாஸில் ஊற்றி பருகினால் வெள்ளைமுடி கருமையாக மாறும்.

அதேபோல் முருங்கை கீரை,கரிசலாங்கண்ணி கீரை மற்றும் நெல்லிக்காய் ஆகியவற்றை பொடித்து டீ செய்து குடித்தால் நரைமுடி அடர் கருமையாக மாறிவிடும்.