முள்ளங்கியுடன் இந்த பொருளை சேர்த்து சாப்பிட்டால் ஆபத்து.. எச்சரிக்கை!!

0
107
if-you-eat-this-product-with-radish-it-is-dangerous-warning
if-you-eat-this-product-with-radish-it-is-dangerous-warning

முள்ளங்கியுடன் இந்த பொருளை சேர்த்து சாப்பிட்டால் ஆபத்து.. எச்சரிக்கை!!

முள்ளங்கி ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் நிலத்தடி காய்கறிகள் ஒன்றாகும். இதில் பல்வேறு வைட்டமின்களும், தாதுக்களும் நிறைந்துள்ளன. முள்ளங்கியில் பல்வேறு வகையான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. முள்ளங்கியின் இலைகள் மற்றும் விதைகளும் உடலுக்கு பயனுள்ளதாக இருக்கிறது.

முள்ளங்கியில் பொட்டாசியம்,கால்சியம், இரும்பு ,மாங்கனிசு மற்றும் பல்வேறு வகையான தாதுக்கள் நல்ல அளவில் உள்ளன. முள்ளங்கியில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. முள்ளங்கியில் உள்ள நீர் சருமத்தின் ஈரப்பதத்தை பராமரிக்கிறது மற்றும் சருமத்தில் சுருக்கங்கள் வராமல் தடுக்கிறது.

முள்ளங்கி பல நன்மைகளைக் கொண்டுள்ளது. எனினும் சில சமயங்களில் இது சில பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். அவை:

1. முள்ளங்கியுடன் உளுந்தை சேர்த்து எடுத்துக் கொள்ளக் கூடாது.

2. பால் குடித்த பின் முள்ளங்கியை உட்கொள்ளக் கூடாது.

3. முள்ளங்கியை மீனுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது.

4. பலருக்கு முள்ளங்கி மற்றும் வெள்ளரிக்காய் சேர்த்து சாலட்டில் சாப்பிடும் பழக்கம் உள்ளது.ஆனால் இந்த இரண்டு பொருட்களையும் ஒன்றாக உட்கொள்ளக் கூடாது.

5. ஆரஞ்சு பழத்தை முள்ளங்கியுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது.

6. முள்ளங்கியுடன் பாகற்காய் சாப்பிடக்கூடாது .உண்மையில் இது சுவாசம் மற்றும் இதய பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

7. முள்ளங்கியுடன் தேநீர் அருந்துவதால் அமிலத்தன்மை,மலச்சிக்கல் போன்றவை ஏற்படும்.அதேசமயம் தேநீர் அருந்திய பின் முள்ளங்கியை உட்கொள்ளக்கூடாது. முள்ளங்கியின் தாக்கம் குளிர்ச்சியாக இருப்பதால் அதை சூடான பொருட்களுடன் எடுத்துக் கொள்ளும் போது அது ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது.

Previous articleஉங்கள் நகங்களில் இந்த அறிகுறி தென்படுகிறதா?? அப்படியானால் முக்கிய ஊட்டச்சத்து குறைபாடாக இருக்கலாம்!!!
Next articleநுரையீரலில் உள்ள சளி ஒரே நாளில் கரைந்து வெளியேற வேண்டுமா! ஒரு டம்ளர் இதனை குடித்தால் போதும்!