TN Gov: திமுக ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம்தோறும் ஆயிரம் வழங்குவதாக தெரிவித்திருந்தது. அதன்படி ஒரு கோடி க்கும் மேற்பட்டோருக்கு ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறது. ஆனால் இதனால் பெரும்பாலான மகளிர் திருப்தி அடையவில்லை. ஏனென்றால் இந்த ஆயிரம் ரூபாய் கிடைக்க வேண்டுமென்றால் அரசு கூறிய வரைமுறைக்கு கீழ் இருக்க வேண்டும். அரசு உத்தியோகத்தில் இருப்பவர்கள் பென்ஷன் வாங்குபவர்கள் என யாருக்கும் இது செல்லுபடியாகாது.
அதேபோல மாற்றுத் திட்டத்தின் மூலம் உதவித்தொகை பெற்று வந்தாலும் இந்த திட்டம் மூலம் பயன் பெற முடியாது. அந்தவகையில் கணவரால் கை விட பெற்றவர்கள் உதவித் தொகை வாங்குவது உண்டு, அவர்களால் இந்த திட்டத்தை பயன்படுத்திக்க முடியாது. இந்த முறை அவர்களுக்கு ரூ 300 அதிகரித்து வழங்குவதாக சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இப்படிப்பட்ட சூழலில் பெண்கள் மறுவாழ்வு மையத்தில் இருப்பவர்கள் கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவிகள் போன்றோருக்கும் இத்திட்டம் செல்லுபடியாகாமல் இருந்தது.
பல்வேறு கோரிக்கைகளுக்கு பிறகு சில வரைமுறைகளை தளர்த்தி விட்டனர். அதன்படி பெண்கள் மறுவாழ்வு மையத்தில் இருப்பவர்கள் கார்ப்பரேஷன் ஊழியர் மனைவிகள் என அனைவரும் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என கூறினர். அதேபோல தேர்தல் நெருங்கி வரும் பட்சத்தில் இத்திட்டத்தை விரிவாக்கம் செய்து இனி புதிதாக ரேஷன் அட்டை விண்ணப்பிக்கும் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் வழி செய்வதாக கூறியுள்ளனர். தற்பொழுது இத்திட்டத்தின் 20 வது தவணையானது பயனாளிகளுக்கு போடப்பட்டுள்ளது. அதன்படியே ஒரு கோடி 6 லட்சம் பயனாளிகள் உள்ளனர். மேற்கொண்டு திட்டம் ரீதியாக விரிவாக்கம் செய்யப்படும் என அறிவித்துள்ளனர்.