234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி! முக்கிய கட்சியின் போஸ்டரால் திமுக கூட்டணியில் பதற்றம்!

Photo of author

By Sakthi

திமுக தன்னுடைய கூட்டணி கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமாக தொடங்கியிருக்கிறது இருந்தாலும் காங்கிரஸ் போன்ற முக்கிய கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு விவகாரத்தில் அதிருப்த்தியில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு செய்வதில் முரண்பாடு ஏற்பட்டு இருக்கின்ற நிலையில், இன்றையதினம் நடைபெறவிருக்கும் பேச்சுவார்த்தையில் அதற்கான உடன்பாடுகள் இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக நம்பப்படுகின்றது. திமுக கூட்டணியில் இருக்கின்ற மிகப் பெரிய கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு குறைந்தளவிலான தொகுதிகளை திமுக ஒதுக்குவதற்கு முடிவு செய்திருப்பதால் கூட்டணியில் முரண்பாடு ஏற்பட்டிருக்கிறது. இதுகுறித்து இரண்டு கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று இதுவரையில் எந்த ஒரு சுமுகமான முடிவு எட்டப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தினம் தன்னுடைய அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறது திமுக.

திமுக தன்னுடைய கூட்டணியில் இடம் பெற்றிருக்கின்ற காங்கிரஸ் கட்சிக்கு சென்ற 2016ஆம் வரும் சட்டசபை தேர்தலில் 41 இடங்கள் ஒதுக்கியது. அதே அளவிலான தொகுதிகளை ஒதுக்க காங்கிரஸ் கட்சி கோரிக்கை வைத்தது. ஆனாலும் திமுக காங்கிரஸ் கட்சிக்கு அதிகபட்சமாக 20 தொகுதிகள் வரை மட்டுமே கொடுப்பதற்கு முடியும் என்று தெரிவித்து இருப்பதாக கூறப்படுகின்றது.If you give, give 41 constituencies ... No, leave the man ... Congress to stifle DMK

இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் சத்தியமூர்த்தி பவனில் நேற்றைய தினம் காங்கிரஸ் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் எல்லோரையும் அழைத்து கருத்து கேட்டு இருக்கிறார். அந்த சமயத்தில் பல கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. குறைவான தொகுதிகள் திமுக தரப்பில் ஒதுக்கினால் கூட்டணியை விட்டு வெளியேறி விடலாம் என்றும் ஒரு சிலர் தெரிவித்திருப்பதாக தெரிகிறது.

இந்த சூழ்நிலையில் பேச்சுவார்த்தைக்கு காங்கிரஸ் கட்சியை திமுக தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. அந்த அழைப்பின் படி இன்றைய தினம் காலை திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் கே எஸ் அழகிரி மற்றும் கே ஆர் ராமசாமி போன்ற தலைவர்கள் திமுகவின் பேச்சுவார்த்தை குழுவை சந்திக்க இருக்கிறார்கள். இன்றைய தின பேச்சுவார்த்தையில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இடையே உடன்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. 22 முதல் 24 தொகுதிகள் வரையில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் என்று தெரியவந்திருக்கிறது.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் கொடுத்தால் 41 தொகுதிகள் கொடுங்கள் இல்லை என்றால் நாங்கள் தனித்து நின்று கொள்கிறோம் என்று தெரிவித்து சுவரொட்டிகள் அடித்து மிகப் பெரிய பரபரப்பை உண்டாக்கி இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.