இயக்குனர் பாரதிராஜா அவர்களின் துயரத்தை போக்க அவரை நேரில் சந்தித்த கங்கை அமரன் அவர்கள் சிறு பொன்மணி அசையும் அதில் என்ற பாடலை பாடி பாரதிராஜா அவர்களின் பழைய நினைவுகளை பகிர்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனைப் பார்த்த மூத்த பத்திரிக்கையாளர் சேகுவாரா அவர்கள் youtube சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருப்பதாவது :-
பாரதிராஜா மற்றும் கங்கை அமரன் இருவருமே கலையில் வாழ்ந்தவர்கள் எனவே அவர்களின் ஆறுதல் மொழி கூட கலையாகத்தான் இருக்கிறது. அதனை பார்க்கும் பொழுது எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது என தெரிவித்த அவர், இவர்களுடைய காலகட்டத்தில் இருந்து இன்று வரை திரையுலகில் மிகப்பெரிய ஜாம்பவான்கள் ஆக இளையராஜா பாரதிராஜா இருவரும் திகழ்ந்து வருகின்றனர் என தெரிவித்திருக்கிறார்.
கலையில் வளர்ந்த இவர்கள் உங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் கூட உச்சத்திலேயே வாழ்ந்து வருவதாகவும் இறங்கி வந்த தங்களுடைய பிள்ளைகளுடன் இணைந்து வாழ்வது என்பது சாத்தியமற்றதாக இருக்கிறது என்றும் கூறியுள்ளார். ஒருவர் இறந்த பின்பு அவருக்கு மோட்ச தீபம் ஏற்றி வைப்பது முறையானதா அல்லது அவர் உயிருடன் இருக்கும் பொழுதே அவரோடு அவருக்கு தேவையான அனைத்தையும் என்று மகிழ்வோடு உயிர் பிரிவது நல்லதா என கேள்வி எழுப்பி இருக்கிறார்.
இசையமைப்பாளர் இளையராஜா அவர்களுக்கு இசைஞானி என்ற பட்டத்தை கலைஞர் வழங்கி இருக்கிறார். இந்த பட்டத்தை மிகுந்த மகிழ்வோடு பெற்றுக் கொண்ட இளையராஜா அதனை ஒரு மேடையில் சுட்டிக்காட்டும் பொழுது, பாடல்களையும் இவருக்கே திருடி கொள்கிறார்கள். பிறகு இசைஞானி என்ற பட்டத்தையும் இவர்களை கொடுக்கிறார்கள் என மிகவும் நக்கலாக பேசியுள்ளார். ஒரு வருடம் பட்டத்தை பெற்றுக்கொண்டு அதன்பின் தன் தேவை முடிந்தவுடன் தூக்கி எறிந்து பேசுவது எந்த விதத்தில் முறை என கேட்டிருக்கிறார். பொதுவாகவே இளையராஜா அவர்கள் பொதுவெளியில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது தெரியாத மனிதராகவும் இங்கீதம் தெரியாதவராகவுமே இருந்து வருகிறார் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.