ஒயின் ஷாப்பிற்கு இப்படி சென்றால் தான் இனி சரக்கு! அரசின் அதிரடி உத்தரவு!

0
146

ஒயின் ஷாப்பிற்கு இப்படி சென்றால் தான் இனி சரக்கு! அரசின் அதிரடி உத்தரவு!

கொரோனா தொற்றானது கடந்த வருடம் அதிக அளவு தீவிரம் காட்டியது. அதனையடுத்து இந்த வருடம் ஏற்றம் இறக்கமாக இருந்தது. மூன்றாவது அலை அதிக அளவு மக்களை பாதிக்கும் என்று கூறினர். ஆனால் அதன் தாக்கம் சற்று குறைவாகத்தான் காணப்பட்டது. வழக்கம்போல் தொற்று குறைந்ததும் அரசாங்கம் அனைத்து துறைகளிலும் விதித்த கட்டுப்பாடுகளை நீக்கியது.

மக்களும் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விட்டனர். ஆனால் தற்பொழுது மீண்டும் தொற்றானது விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்துவிட்டது. அனைத்து மாநிலங்களிலும் பாதிப்பின் எண்ணிக்கையானது உயர்ந்து வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களும் தங்களின் தொற்று பாதிப்பிற்கு ஏற்ப மீண்டும் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் நமது தமிழகத்தில் அதிகளவு தொற்று பாதிப்புள்ள மாவட்டங்கள் அனைத்திலும் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று கூறி உள்ளனர்.

மேலும் பொது இடங்களில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என கேட்டுள்ளனர். அந்த வகையில் தமிழக அரசு மதுக்கடைக்கு வருபவர்களுக்கு சில கட்டுப்பாட்டை அமல்படுத்தியுள்ளது.அதில் முதலாவதாக மதுக்கடைக்கு வருபவர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்துதான் வரவேண்டும். அவ்வாறு அணிந்து வருபவர்களுக்கு தான் கட்டாயம் மதுபானம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. அதேபோல மதுபான கடைகளும் பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்கும்படி மதுபான நிர்வாகம் அனைத்து மேலாளர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது. முன்பு கடைப்பிடிக்கப்பட்ட அனைத்து கட்டுப்பாடுகளையும் செயல்படுத்துமாறும் தெரிவித்துள்ளது.

Previous articleமூச்சு முட்ட முன்னழகை காட்டி போஸ் கொடுக்கும் ராஷ்மிகா மந்தனா
Next articleசேலம் நாமக்கல் செங்கல்பட்டு தொடர் 5 மாவட்ட மக்களுக்கு அடித்த ஜாக்பாட்! தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு!