இந்த ஒரு காயை அரைத்து சாறு எடுத்து குடித்தால்.. வயதானாலும் உங்கள் தலையில் ஒரு முடி கூட நரைக்காது!!

Photo of author

By Divya

இன்றைய இளைய தலைமுறையினர் நரைமுடி பிரச்சனையால் கடும் அவதியடைந்து வருகின்றனர்.இதற்காக கெமிக்கல் டை பயன்படுத்தாமல் இயற்கை வழிகள் மூலம் தலை முடியை கருமையாக்குவது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

1)பெரிய நெல்லிக்காய் – மூன்று
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை:

முதலில் மூன்று பெரிய நெல்லிக்காய் எடுத்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.அதன் விதைகளை மட்டும் நீக்கிவிடவும்.

பிறகு இந்த நெல்லிக்காய் துண்டுகளை மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.

பிறகு இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி தேவைப்பட்டால் சிறிது தேன் கலந்து பருகலாம்.இந்த நெல்லிக்காய் ஜூஸை குடிப்பதால் தலைமுடியின் நிறம் கருமையாகவே இருக்கும்.

தேவையான பொருட்கள்:

1)கேரட் – ஒன்று
2)தேன் – ஒரு தேக்கரண்டி
3)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை:

ஒரு முழு கேரட்டை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பிறகு மிக்ஸி ஜார் ஒன்றில் நறுக்கிய கேரட்டை சேர்த்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.

பிறகு இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி ஒரு தேக்கரண்டி தேன் கலந்து குடிக்கவும்.இந்த கேரட் ஜூஸை தினமும் பருகி வந்தால் உங்களுக்கு நரைமுடி பிரச்சனையே ஏற்படாது.

தேவையான பொருட்கள்:

1)கற்றாழை – ஒரு மடல்
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை:

முதலில் ஒரு கற்றாழை மடலை தோல் நீக்கி அதனுள் உள்ள ஜெல்லை கத்தியால் பிரித்தெடுக்கவும்.இதை ஒரு கிண்ணத்தில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி அலசி சுத்தம் செய்யவும்.

கற்றாழை ஜெல்லை மூன்று முதல் நான்கு முறையாவது சுத்தம் செய்ய வேண்டும்.பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.

இதை நாள்தோறும் குடித்து வந்தால் தலை முடி சார்ந்த பாதிப்புகள் அனைத்திற்கும் தீர்வு கிடைக்கும்.