ஆதார் கார்டு இருந்தால் ரூ.10 லட்சம் வரை கடன் கிடைக்கும்!! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!

Photo of author

By Rupa

மத்திய மற்றும் மாநில அரசு வழங்கும் நலத்திட்டங்கள்,மானியங்களை பெற ஆதார் முக்கிய ஆவணமாக திகழ்கிறது.அந்தவகையில் ஆதார் கார்டு இருந்தால் ரூ.10,00,000 வரை கடன் வழங்கப்படும் என்று தமிழக அரசு அதிரடியாக தெரிவித்திருக்கிறது.

தமிழக அரசு மாநில மக்களுக்கு பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.குறிப்பாக பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்கு பயனுள்ள திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

அதன்படி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான தொழில் முனைவுத் திட்டத்திற்கு ஆதார் கார்டு கட்டாயம் இருக்க வேண்டுமென்று தமிழக அரசின் அதிகாரபூர்வ இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.CM ARISE என்ற பெயரில் கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொழில் முனைவுத் திட்டம் தொடங்கப்பட்டது.

இந்த திட்டத்தின் கீழ் ரூ.10,00,000 வரை கடன் பெற முடியும்.நீங்கள் வாங்கும் கடனிற்கு 35% மானியம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த திட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் மட்டுமே பயன்பெற முடியும்.இத்திட்டத்தின் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் மேம்படுவதோடு பொருளாதார அதிகாரமளிக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழக அரசு இந்த தொல்குடி திட்டத்திற்கு ரூ.1000 கோடி ஒதுக்கி பழங்குடியின மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு வழிகை செய்து வருகிறது.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் இத்திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் வரை கடன் பெற முடியும்.

அதேபோல் நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டத்தில் மானியத்துடன் ரூ.5 லட்சம் வரை கடனுதவி வழங்கப்டுகிறது.இந்த திட்டங்களுக்கு விண்ணப்பித்து பயன்பெற ஆதார் அட்டை அவசியம் இருக்க வேண்டுமென்று தமிழக அரசின் அதிகாரபூர்வ இதழில் தெரிவித்திருக்கிறது.