வீட்டில் உள்ள ஈக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த சில எளிய டிப்ஸ் தரப்பட்டுள்ளது.இதை செய்து மொய்க்கும் ஈக்களை முழுமையாக ஒழித்துக்கட்டுங்கள்.
தேவையான பொருட்கள்:
1)கிராம்பு(இலவங்கம்) – 2 அல்லது 5
2)எலுமிச்சம் பழம் – இரண்டு
செய்முறை விளக்கம்:
முதலில் வீட்டை தண்ணீர் போட்டு துடைத்து சுத்தமாக வைத்துக் கொள்ளவும்.பிறகு இரண்டு எலுமிச்சம் பழத்தை எடுத்து இரண்டாக நறுக்கி கொள்ளவும்.
இவ்வாறு செய்தால் நான்கு பகுதிகள் கிடைக்கும்.இதில் ஒவ்வொரு எழுமிச்சையிலும் கிராம்பை குத்தி வீட்டின் நான்கு மூலைகளிலும் வைக்கவும்.இந்த கிராம்பு மற்றும் எலுமிச்சை வாடையால் ஈக்கள் நடமாட்டம் கட்டுப்படும்.
அதேபோல் எலுமிச்சம் தோலில் விளக்கு செய்து கிராம்பு எண்ணெய் ஊற்றி திரி போட்டு பற்ற வைத்தால் அந்த வாசனைக்கு ஈக்…
[11:10 PM, 12/11/2024] Rupa New Office: முதுமைக்கு குட் பாய் சொல்ல.. உங்கள் உணவுப்பட்டியலில் இதை சேர்த்துக் கொள்ளுங்கள்!!
உலகில் பிறந்த அனைவருக்கும் முதுமை கட்டாயம் வரக் கூடிய ஒன்றாகும்.இளமையை அனுபவிக்கும் நம்மால் முதுமையை தவிர்க்கவே முடியாது.காசு பணம் இருந்தாலும் வயதான பிறகு இளமையை மட்டும் மீட்டெடுக்க முடியாது.
ஆனால் நாம் இளமை பருவத்தில் சில விஷயங்களை செய்தால் முதுமையை சிறு காலத்திற்கு தள்ளிப்போடலாம்.இளமையாக இருப்பதற்கு நாம் முதலில் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.அழகு சாதன பொருட்களை கொண்டு தற்காலிகமாக முக சுருக்கத்தை மறைக்க முடியும்.ஆனால் அவை என்றும் நிரந்தர தீர்வாக இருக்காது.
நாம் 30 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க பழங்கள்,காய்கறிகள் மற்றும் கீரைகளை அவசியம் உட்கொள்ள வேண்டும்.
சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பழங்களை உட்கொள்ள வேண்டும்.பப்பாளி,நாவல்,மாதுளை,ஆப்பிள்,வாழைப்பழம் போன்றவை சருமத்தை ஆரோக்கியமாக வைக்கிறது.
சர்க்கரை நிறைந்த உணவுகளை முடிந்தவரை தவிர்த்து கொள்ளவும்.டீ,காபிக்கு பதில் க்ரீன் டீ,மூலிகை டீ போன்றவற்றை செய்து பருகலாம்.அதிக எண்ணெய் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.
அசைவ உணவுகளை அளவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.கேரட்,பீட்ரூட் போன்ற காய்கறிகள் சருமத்தை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.நீர்ச்சத்து நிறைந்த சுரைக்காய்,புடலங்காய்,பீர்க்கங்காய் மற்றும் தர்பூசணி போன்றவற்றை உட்கொண்டால் சரும வறட்சி மற்றும் சுருக்கம் ஏற்படுவது தடுக்கப்படும்.
அதிக காரம் மற்றும் உப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.உடலில் நோய் இல்லாமல் இருந்தாலே இளமை மற்றும் ஆரோக்கியத்துடன் வாழமுடியும்.தினமும் ஒரு பழத்தை ஜூஸாக செய்து பருகலாம்.நாள் ஒன்றில் 8 முதல் 10 கிளாஸ் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.கெமிக்கல் பொருட்களை சருமத்திற்கு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
இயற்கை பொருட்களை கொண்டு சரும பராமரிப்பில் ஈடுபட வேண்டும்.கற்றாழை,வேப்பிலை, மஞ்சள்,தயிர்,தக்காளி,சந்தனம் உள்ளிட்ட பொருட்களை கொண்டு சருமத்தை பராமரித்து வந்தால் முதுமை தோற்றத்தை சந்திக்க மாட்டீர்கள்.