ஆரஞ்சு பழத்தோல் இருந்தால்.. கரப்பான் பூச்சி தொல்லைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்!!

Photo of author

By Gayathri

இன்று கரப்பான் பூச்சி நடமாட்டம் இல்லாத வீடுகளே இல்லை.அனைத்து பருவங்களிலும் கரப்பான் பூச்சிகள் வீட்டிற்குள் நுழைந்து பெரும் தொந்தரவை கொடுக்கிறது.குறிப்பாக தற்பொழுது நிலவி வரும் குளிர் சீசனில் கரப்பான் பூச்சிகளுக்கு பஞ்சம் ஏற்படாது.

வீட்டு கிட்சன்,கழிவறை என்று அனைத்து இடங்களிலும் கரப்பான் பூச்சி நடமாட்டம் அதிகமாகவே உள்ளது.கரப்பான் பூச்சிகளை விரட்டி அடிக்க பல முயற்சிகளை செய்யும் பலனில்லை என்று சலித்து போனவர்கள் இங்கு தரப்பட்டுள்ள டிப்ஸை பின்பற்றி அதன் தொல்லையை கட்டுப்படுத்த முயற்சிக்கலாம்.

வீட்டில் கரப்பான் பூச்சி நடமாட்டம் எங்கு அதிகமாக உள்ளது என்பதை கவனியுங்கள்.அந்த இடத்தில் இங்கு சொல்லப்படும் பொடியை தூவி விட்டால் அதன் தொல்லை கட்டுப்படும்.அது ஆரஞ்சு பழத் தோல் பொடி தான்.ஆரஞ்சு பழத்தின் தோலை சேகரித்து வெயிலில் நன்கு காயவைத்து எடுத்துக் கொள்ளவும்.

ஆரஞ்சு தோல் நன்றாக காய்ந்து இருக்க வேண்டும்.இந்த ஆரஞ்சு தோலை கரப்பான் பூச்சி நடமாடும் இடத்தில் வைத்தால் அதில் இருந்து வெளியேறும் வாசனைக்கு அதன் தொல்லை முழுமையாக கட்டுப்படும்.அதேபோல் ஆரஞ்சு தோலை உலர்த்தி நன்றாக அரைத்து பொடியாக்கி கரப்பான் பூச்சி நடமாட்டம் உள்ள இடத்தில் தூவி விட்டும் அதன் தொல்லையை கட்டுப்படுத்தலாம்.