இந்த அறிகுறிகள் இருந்தால், இறந்த ஆன்மா உங்கள் வீட்டில் இருக்கிறது என்று அர்த்தம்..!!

Photo of author

By Janani

இந்த அறிகுறிகள் இருந்தால், இறந்த ஆன்மா உங்கள் வீட்டில் இருக்கிறது என்று அர்த்தம்..!!

Janani

நமது வீட்டில் ஒருவர் இறந்து விட்டார் என்றால் அவரது ஆன்மாவும் சில நாட்களில் சென்று விடும். அந்த ஆன்மாவிற்கு அடுத்த பிறவி என ஒன்று இருந்தால் அடுத்த பிறவிக்கான பிறப்பை எடுக்கும். ஆனால் இறந்தவர்களுக்கு ஏதேனும் ஒரு ஆசையோ அல்லது அவர்களது விருப்பங்கள் ஏதேனும் நிறைவேறாமல் இருந்தாலும் அந்த ஆன்மா அந்த வீட்டை விட்டு செல்லாமல் அங்கேயே இருக்கும். அவர்கள் இறந்த பிறகு அவர்களுக்கு செய்ய வேண்டிய சடங்கு, சம்பிரதாயம் மற்றும் திதி கொடுப்பது, அவர்களை வழிபடுவது ஆகிய அனைத்தையும் நாம் முறையாக செய்தால் மட்டுமே அவர்களது ஆன்மா சாந்தி அடையும்.

அவ்வாறு ஒருவர் இறந்து விட்டால் அவரது ஆன்மாவும் இந்த உலகை விட்டு சென்று விட்டதா, இல்லையா என்பதை தெரிந்து கொள்வதற்கு சில அறிகுறிகள் உள்ளது. அந்த அறிகுறிகள் என்ன என்பதை தற்போது காண்போம்.

நமது பூஜை அறையில் விளக்கேற்றிய சிறிது நேரத்திற்குப் பிறகு அந்த திரியானது தானாகவே உள்ளே சென்று அந்த விளக்கு அணைந்து இருக்கும். பாலானது அடிக்கடி திரிந்து போனாலும் நமது வீட்டில் ஆன்மா இருப்பதாக அர்த்தம். ஒரு சில நேரங்களில் வெளியில் இருந்து யாரோ ஒருவர் கூப்பிடுவது போன்ற குரல் கேட்கும். அவ்வாறு இருந்தாலும் ஆன்மா நமது வீட்டில் இருப்பதாக அர்த்தம்.

நாம் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது ஏதோ ஒரு சத்தத்தை கேட்டு எழுந்தது போல இருக்கும். ஆனால் தூக்கத்திலிருந்து எழுந்திருக்க மாட்டோம், எழுந்தது போன்ற உணர்வு மட்டும் நமக்கு அடிக்கடி தோன்றும். அதேபோன்று இறந்தவர்களின் ஆன்மா ஒருவர் வீட்டில் இருக்கிறது என்றால் அந்த வீட்டில் யாரோ ஒருவர் அழுவது போன்ற குரல் கேட்கும், அல்லது பூனை அந்த வீட்டிற்கு வந்து அழுவது போன்ற சத்தத்தை கொடுக்கும்.

வீட்டின் ஏதேனும் ஒரு பகுதியில் செடியின் பச்சை வாசனை என்று சொல்லக்கூடிய அந்த வாசனை இருக்கும். அதேபோன்று நாம் தூங்கும் பொழுது யாரோ ஒருவர் நமது காலை பிடித்து இழுப்பது போன்ற உணர்வும் அடிக்கடி தோன்றினால், அதுவும் ஆன்மா நமது வீட்டில் இருப்பதாக அர்த்தம்.

இந்த அறிகுறிகள் இருந்தால் நமது முன்னோர் யாருக்காவது ஏதேனும் ஒரு குறைபாட்டினை வைத்திருப்போம் அல்லது அவர்களை வழிபடுவதை நிறுத்தி இருப்போம். எனவே அவர்களுக்கு செய்ய வேண்டிய சடங்கு, சம்பிரதாயம் மற்றும் திதி ஆகியவற்றை கண்டிப்பாக செய்து முடிக்க வேண்டும்.

அதேபோன்று மாதந்தோறும் அமாவாசை நாட்களில் நமது முன்னோர்களுக்கான வழிபாட்டினை செய்து, காகத்திற்கு எள் கலந்த சாதத்தினை வைப்பதும் அந்த ஆன்மாவிற்கு சாந்தியை கொடுத்து அவர்களின் ஆசியை நமக்கு பெற்று தரும்.