தற்பொழுது பெரும்பாலான வீடுகளில் கேஸ் சிலிண்டர் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது.மத்திய அரசின் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு புதிய இலவச சிலிண்டர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த உஜ்வாலா திட்டம் கடந்த 2016 ஆம் ஆண்டு மத்திய அரசால் தொடங்கப்பட்டது.ஏழ்மையில் வாழும் மக்கள் பயன்பெறும் வகையில் இலவச கேஸ் இணைப்பு மற்றும் அடுப்பு வழங்கப்படுகிறது.பொருளாதாரத்தில் பின்தங்கிய லட்சக்கணக்கான மக்கள் இந்த திட்டத்தில் பயனடைந்து வருகின்றனர்.
இலவச கேஸ் இணைப்பு பெற தகுதி:
1)விண்ணப்பதாரர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
2)விண்ணப்பத்தார் 18 வயதை பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.
3)இதுவரை கேஸ் இணைப்பு பெறாதவராக இருக்க வேண்டும்.
4)மிகவும் பிற்படுத்தப்படுத்த வகுப்பை சேர்ந்த பெண்களாக இருக்க வேண்டும்.
5)வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
பிரதான் மந்திரி உஜ்வலா திட்டத்திற்கு விண்ணப்பிக்க தேவைப்படும் ஆவணங்கள்:
**ஆதார் கார்டு
**ரேஷன் கார்டு
**வங்கி கணக்கு எண்
**இருப்பிடச் சான்றிதழ்
பிரதான் மந்திரி உஜ்வலா திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?
http://www.pmuy.gov.in/ujjwala2.html என்ற மத்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் கேஸ் இணைப்பு நிறுவனத்தை தேர்வு செய்ய வேண்டும்.
அடுத்து Register Now என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.அதன் பிறகு பெயர்,பயன்பாட்டில் இருக்கின்ற தொலைபேசி எண்,மின்னஞ்சல் ஐடி மற்றும் கேப்சா கோடு ஆகியவற்றை என்டர் செய்ய வேண்டும்.
பிறகு விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தியிட்டு தேவைப்படும் ஆவணங்களை இணைத்து தேர்வு செய்த கேஸ் நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
பிறகு உங்கள் விண்ணப்பம் சரிபார்க்கப்பட்டு இலவச கேஸ் அடுப்பு மற்றும் ஒரு சிலிண்டர் வழங்கப்படும்.