இந்த ஒரு ஆவணம் இருந்தாலே.. இறந்த ஒருவரின் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை ஈஸியாக பெறலாம்!

0
119
If you have this one document.. you can easily get the money in the bank account of a dead person!
If you have this one document.. you can easily get the money in the bank account of a dead person!

இந்த ஒரு ஆவணம் இருந்தாலே.. இறந்த ஒருவரின் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை ஈஸியாக பெறலாம்!

தற்போதைய காலகட்டத்தில் நமது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்கே சில விதிமுறைகள் இருக்கிறது.அப்படி இருக்கையில் இறந்த ஒருவரின் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை எடுக்க என்னென்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது குறித்து அனைவரும் அறிந்து வைத்திருக்க வேண்டும்.

வங்கிகளில் சேவிங்ஸ் அல்லது கரண்ட் அக்கவுண்ட்டில் 10 வருடங்களாகியும் எந்த ஒரு பரிமாற்றமும் நடைபெறவில்லை என்றாலோ அந்த கணக்குகளில் இருக்கும் தொகையை யாரும் எடுக்கவில்லை என்றாலோ அதில் இருக்கும் பணத்தை DEAF கணக்கிற்கு ரிசர்வ் வங்கி மாற்றிவிடும்.இதுவரை DEAF கணக்கிற்கு ரூ.35,000 கோடி வரை மாற்றப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்நிலையில் 100 டேஸ் 100 பேஸ் என்ற திட்டத்தின் அடிப்படையில் அனைத்து வங்கிகளும் கேட்கப்படாத டெபாசிட் விவரங்களின் பட்டியலை அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் வெளியிட வேண்டுமென்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியிருக்கிறது.இதன் மூலம் வங்கியில் கணக்கு வைத்திருப்பவரின் டெபாசிட் விவரங்களை அறிந்து கொள்ள முடியும்.டெபாசிட் செய்தவர் இறந்த விட்டார் என்றால் அவரின் கணக்கு விவரங்களை அவரது வாரிசுகள் அல்லது குடும்பத்தார் அறிந்து விதிமுறைபடி பணம் பெற முடியும்.

DEAF கணக்கில் இருக்கும் உங்கள் பணத்தை திரும்ப அனெக்சர் பி படிவத்தை பூர்த்தியிட்டு வங்கியில் சமர்த்து டெபாசிட் பணத்தை பெற்றுக் கொள்ள முடியும்.வங்கி கணக்கு வைத்திருப்பவர் இறந்து விட்டால் அவர் குறிப்பிட்டிருக்கும் வாரிசு தேவையான ஆவணங்களை வங்கியில் சமர்ப்பித்து பணம் பெற்றுக் கொள்ள முடியும்.ஒருவேளை இறந்தவர் வாரிசை குறிப்பிடாத பட்சத்தில் சட்டபூர்வ வாரிசு சான்றிதழை சம்மந்தபட்ட வங்கியில் ஒப்படைத்து பணத்தை பெற்றுக் கொள்ள முடியும்.