இனி இப்படி சிகரெட் பிடித்து புகையை விட்டால் ஜெயில் தான்! சேலத்தில் நடந்த பரபரப்பு சம்பவம்!

0
167
If you hold a cigarette and quit smoking like this, you're in jail! Exciting incident in Salem!
If you hold a cigarette and quit smoking like this, you're in jail! Exciting incident in Salem!

இனி இப்படி சிகரெட் பிடித்து புகையை விட்டால் ஜெயில் தான்! சேலத்தில் நடந்த பரபரப்பு சம்பவம்!

புகைப்பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு என்று பல விழிப்புணர்வுகள் வந்த வண்ணம் தான் உள்ளது. ஆனால் புகை பிடிப்பவர்கள் தங்கள் பழக்கத்தை விடுவதாக இல்லை. பலர் இந்த புகைப்படக்கத்திற்கு அடிமையாகும் நிலைக்கும் தள்ளப்படுகின்றனர். புகைப்பிடிப்பவர்கள் புகையை வெளியே விடுவதனால் அது அவருக்கு மட்டும் இன்றி அதை சுவாசிக்கும் மற்றவர்க்கும் தீமையே விளைவிக்கும். புகை பிடிப்பதால் நுரையீரல் அதிகம் பாதிப்பிற்குள்ளாகிறது. இவ்வாறு இருக்கையில் தற்பொழுது சேலத்தில் சிகரெட் பிடித்து புகையை விட்டதால் காவல்துறை வரை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தும் அளவிற்கு ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. தாரமங்கலம் அருகே உள்ள பகுதிதான் செம்மண் கூடல். இந்த பகுதியில் ஆனந்த் மற்றும் அவரது உறவினர்கள் வசித்து வருகின்றனர்.

ஆனந்த் வழக்கம்போல் தனது மாமா மாரியப்பன் என்பவர் உடன் அவர் வசிக்கும் பகுதியில் உள்ள ஒரு பெட்டி கடைக்கு சென்று உள்ளார். அந்தப் பெட்டி கடையின் முன்பு காந்தி என்பவர் சிகரெட் பிடித்துள்ளார். காந்தி சிகரெட் பிடித்துக் கொண்டு அதன் புகையை அங்கு கடைக்கு வந்த மாரியப்பன் முகத்தின் மேல் ஊதியுள்ளார். மாரியப்பன் உடன் வந்த ஆனந்த் என்பவர் ஏன் இவ்வாறு செய்கிறாய் என்று காந்தியிடம் கேட்டுள்ளார். இருவருக்கிடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. பிறகு காந்தி செய்த தவறை உணராமல் தனது உறவினர்களை அழைத்து வந்து தட்டி கேட்ட ஆனந்தை தாக்கியுள்ளார். பலத்த காயம் அடைந்த ஆனந்த் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவர்கள் காயத்தை குறித்து கேட்டபோது நடந்துவற்றை ஆனந்த் கூறியுள்ளார்.

பிறகு மருத்துவர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் கொடுத்ததன் பேரல் காவல்துறையினர் விசாரணை செய்து காந்தி கோகுல்ராஜ் மாரியப்பன் வினோத்குமார் சந்தோஷ் சதீஷ் ரமேஷ் ஆசைத்தம்பி என ஒன்பது பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது. ஒரு சிகரெட் குடித்து புகையை முகத்தின் மேல் விட்டதால் பெரும் கலவரமே ஊருக்குள் நடைபெற்று விட்டது. இதனால் அப்பகுதி முழுவதும் சற்று பரபரப்பாக காணப்படுகிறது.

Previous articleபள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடுவது எப்போது? அமைச்சர் கூறிய பதில் இதோ!
Next articleஅதிகரித்து வரும் கொரோனா தொற்று! அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு!!