வீட்டில் கடவுள் படங்கள் மற்றும் சிலைகள் வைத்து வணங்கினால் நோய் நொடியின்றி வாழலாம்.வீட்டில் எதிர்மறை எண்ணங்கள் நீங்கி நேர்மறை ஆற்றல் அதிகரிக்க குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்க கடவுளை வைத்து வழிபடுகிறோம்.
அதேபோல் யானை,ஆமை போன்ற சிலைகளையும் வீட்டில் வைத்தால் ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும்.சிலர் ஆமையை வீட்டில் வைக்கக் கூடாது என்பார்கள்.ஆனால் செல்வந்தர்கள் வீட்டில் ஆமை சிலை நிச்சயம் இருக்கும்.வீட்டினல் பண வரவை அதிகரிக்க ஆமை சிலையை வாங்கி வைக்கலாம்.
உயிரோடு இருக்கின்ற ஆமையை வாங்கி அனைவராலும் வளர்க்க முடியாது.இதனால் ஆமை சிலையை வாங்கி வைக்கிறோம்.இந்த ஆமை சிலையை வீட்டின் வடக்கு திசை பார்த்தவாறு வைக்க வேண்டும்.அவ்வாறு செய்தால் தன வரவு தடையின்றி கிடைக்கும்.
அடுத்து யானை சிலை இல்லாத வீடு இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.யானை அதிர்ஷ்டத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறது.யானை சிலையை வீட்டில் வைப்பதால் செல்வம் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.
மீன் சிலை அல்லது மீன் தொட்டி வாங்கி வைத்தால் அதிர்ஷ்டம் பெருகும்.மீன் தொட்டி அல்லது மீன் சிலையை வடக்கு திசையில் வைத்தால் பண வரவு அதிகரிக்கும்.
வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்க கிளி சிலையை வாங்கி வைக்கலாம்.குழந்தைகள் உள்ள அறையில் பித்தளை கிளி சிலையை வைக்கலாம்.வீட்டில் அன்பு அதிகரிக்க,அமைதி நிலவ படுக்கை அறையில் அன்னப்பறவை சிலையை வைக்கலாம்.இது கணவன் மனைவி இடையே அன்பை அதிகரிக்கும்.