தமிழில் எழுத படிக்க தெரிந்தால் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையில் வேலை வாய்ப்பு
தமிழக இந்து சமய அறநிலையத்துறையின் காலிப்பணியிட விவரங்கள் அனைத்தும் அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ள நிலையில், இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.அதில் சில பணிகளுக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்தால் போதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் அனைத்தும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு, தகுதியானவர்கள் தேர்வு மூலமும், நேர்காணல் மூலமும் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவிலில் காலியாகவுள்ள ஓதுவார், பரிசாரகர், காவலர், இரவு காவலர், திருவலகு, கால்நடை பராமரிப்பாளர் போன்ற பணிகளுக்கு பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இப்பணிகளுக்கு தலா 1 காலியிடம் இருப்பதாகவும், பணிக்கு விண்ணப்பிக்கும் நபர் 1.7.2022 ஆம் அன்று தேதியின் படி 18 வயது முதல் 45 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதி வாரியாக இப்பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவின் படி ரூ.11,600/- முதல் ரூ.12,600/- வரை ஊதியம் அளிக்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதில் இப்பணிக்கு நேர்காணல் மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவலர், இரவு காவலர், திருவலகு, கால்நடை பராமரிப்பாளர் உள்ளிட்ட பணிகளுக்கு தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், பரிசாரகர் பணிக்கு தமிழில் எழுதவும் படிக்கவும் மற்றும் பிரசாதம் செய்ய தெரிந்திருக்க வேண்டும். ஓதுவார் பணிக்கு தமிழில் எழுதவும் படிக்கவும் மற்றும் மூன்றாண்டு பாடப்பிரிவை முடித்ததற்கான தேவாரப்பள்ளி வழங்குகின்ற சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
26.11.2022 மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பத்தினை அவர்களின் முகவரிக்கு சேருமாறு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.