கோதுமை மாவில் செய்யப்படும் கலப்படம் தெரிந்தால்.. இனி சப்பாத்தி பூரி சாப்பிடவே மாட்டீங்க!!

Photo of author

By Divya

இன்றைய காலகட்டத்தில் கலப்படம் இல்லாத உணவுகளை பார்ப்பது மிக மிக அரிதாகி விட்டது.குழந்தைகளுக்கு கொடுக்கும் பால் பவுடர் முதற்கொண்டு அனைத்திலும் கலப்படம் தலைவிரித்தாடுகிறது.

இன்று ஆரோக்கியமான உணவை உட்கொள்பவர்கள் மிகவும் குறைவானவர்களே.மைதா போன்ற எந்த ஒரு ஊட்டச்சத்துக்களும் இல்லாத உணவுகளேயே மக்கள் தேடி உண்கின்றனர்.மைதாவில் செய்யப்பட்ட நெய் பரோட்டா,கிளி பரோட்டா,பன் பரோட்டா,கொத்து பரோட்டா என்று உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் உணவுகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

மைதாவின் தீமைகளை அறிந்தவர்கள் அதற்கு மாற்றாக கோதுமை மாவில் தயாரிக்கப்பட்ட சப்பாத்தி,பூரி,பரோட்டா போன்ற உணவுகளை சாப்பிடுகின்றனர்.இந்நிலையில் ஆரோக்கியம் என்று கருதி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் கோதுமை மாவில் ஏகப்பட்ட கலப்படம் செய்யப்படுகிறது என்பது பலரும் அறிந்திராத ஒன்று.

கோதுமை மாவில் வைட்டமின்,மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகளவு நிறைந்திருக்கிறது.கோதுமை மாவில் சப்பாத்தி செய்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.அதேபோல் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.ஆனால் கடைகளில் விற்கப்படும் கோதுமை மாவுகளில் கலப்படம் செய்யப்படுவதால் அது உடல் ஆரோக்கியத்தை பாதித்துவிடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

கோதுமை மாவு கலப்படம்

சில வியாபாரிகள் லாப நோக்கத்திற்காக கோதுமை மாவில் அதிகளவு தவிடு சேர்க்கின்றனர்.தவிட்டில் நார்ச்சத்து அதிகமாக இருந்தாலும் தரம் குறைந்த தவிட்டை கோதுமை மாவில் கலக்கும் போது அவை உண்ணத் தகுதியற்றவையாக மாறுகிறது.

கோதுமையில் கலப்படம் செய்யப்படுவதை கண்டறிவது மிகவும் கடினம்.தவிடு கலந்த கோதுமை உணவுகளை உட்கொண்டால் வயிறு வலி,மலச்சிக்கல்,வயிறு வீக்கம்,அஜீரணக் கோளாறு போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

கோதுமையில் கலப்படம் இருப்பதை கண்டறிவது எப்படி?

முதலில் ஒரு கிளாஸில் தண்ணீர் ஊற்றி ஒரு ஸ்பூன் கோதுமை மாவு போட்டு கலக்கவும்.கலப்படம் இல்லாத கோதுமை மாவு என்றால் மிகவும் குறைவான தவிடு நீரில் மிதக்கும்.கலப்படம் செய்யப்பட்ட கோதுமை மாவு என்றால் அதிகளவு தவிடு தண்ணீரில் மிதக்கும்.இனி கோதுமை மாவு வாங்கினால் இந்த கலப்பட சோதனையை செய்து பாருங்கள்.