வெந்தயக்கீரை  பற்றிய இயற்கை மருத்துவம் தெரிந்தால்!! இனி வீட்டில் எப்போதும் இந்த கீரை தான்!!

0
150

வெந்தயக்கீரை  பற்றிய இயற்கை மருத்துவம் தெரிந்தால்!! இனி வீட்டில் எப்போதும் இந்த கீரை தான்!!

வெந்தயம் என்பது இயற்கை மூலிகை. வெந்தயத்தில் அதிக அளவு நார்ச்சத்து நிறைந்திருக்கிறது. வெந்தயம் மற்றும் வெந்தயக்கீரை சாப்பிடுவதால் வயிற்றுப்புண் குடல் புண் வயிற்றில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளையும் முழுவதுமாக குணமடைய செய்கிறது. வயிற்று பிரச்சனைக்கு பயன்படுத்தும் பொருளில் வெந்தயம் முக்கிய பங்கு வகிக்கிறது. அனைத்து விதமான வயிற்றுப் பிரச்சனைகளையும் வெந்தயம் முழுவதுமாக குணமடைய செய்கிறது. மேலும் இதனை கர்ப்பிணி பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்க மருத்துவர்கள் பயன்படுத்த சொல்வார்கள். மேலும் வெந்தயம் மற்றும் வெந்தயக்கீரை வயிற்றுப் பிரச்சனை மட்டுமின்றி உடல் குளிர்ச்சிக்கு நல்ல மருந்தாக அமைகிறது. அதனைத் தொடர்ந்து வாதம் பிரச்சனைகள் இருப்பவர்கள் ஒரு ஸ்பூன் வெந்தயம் சாப்பிடுவதால் முழுவதுமாக குணமடைய செய்கிறது. அதனையடுத்து பித்தம் மற்றும் கல்லீரல் கல் இருப்பவர்கள் வெந்தயம் கீரை போன்ற உணவுகளை தொடர்ந்து சாப்பிட வேண்டும். இவ்வாறு சாப்பிடுவதால் வயிற்றுப் பிரச்சனை முழுவதும் குணமடையும். ஆனால் டேரியா இருப்பவர்கள் வெந்தயத்தை பயன்படுத்தக் கூடாது.

 

மேலும் வெறும் வயிற்றில் வெந்தயத்தை சாப்பிடுவதால் அனைத்து விதமான உடலில் இருக்கும் பிரச்சனையும் குணமாகிறது. வெந்தய விதைகளை ஊற வைத்து அதனை அரைத்து தலைக்கு தேய்த்து வந்தால் உடல் குளிர்ச்சி அடையும் மற்றும் தலையில் முடி வளர உதவுகிறது. வெந்தயத்தை மாதவிடாய் பிரச்சனையின் போதும் எடுத்துக் கொள்வது வலியை குறைக்க பயன்படுகிறது. உடலில் பல பிரச்சனைகளை சரி செய்கிறது.

 

வெந்தயத்தை முளைக்கட்டிய பயிர்களில் சேர்த்து சிலர் சாப்பிடுவது வழக்கமான ஒன்றாகும். வெந்தயத்தில் பல மருத்துவ குணங்களும் பல நன்மைகளும் இருக்கிறது என்கிறார்கள். தினமும் காலையில் வெந்தயம் ஊர வைத்து தண்ணீரை குடிப்பதால் உடல் குளிர்ச்சி அடையும் வயிற்றில் இருக்கும் அனைத்து பிரச்சனைகளும் உடனடியாக சரியாகும்.

 

கல்லீரல் பாதிப்பு மற்றும் மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் வெந்தய கீரையை அடிக்கடி உணவில் சாப்பிட்டு வந்தால் கல்லீரல் பலம்பெறும். மேலும் அல்சர் உள்ளவர்கள் வாரம் இருமுறை வெந்தய கீரையை சாப்பிட்டால் குடல் புண்கள் ஆறும், இரத்தக் கொதிப்பு நரம்புத் தளர்ச்சி உள்ளவர்களுக்கு இந்த கீரை மிகவும் உகந்தது. “பெண்களுக்கு ஏற்படும் கருப்பை கோளாறுகளையும் சீர்படுத்துகிறது.

இது உணவுப் பொருளாகவும், மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. இதன் செடி  கீரை மற்றும் விதைகள் சமையலுக்கு சுவையூட்டுகிறது, வெந்தயக் குழம்பு, வெந்தய தோசை போன்றவற்றிற்கான மூலப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.

Previous articleமங்குஸ்தான்  அதிசிய பழம்!! இனி இந்த பழம் சாப்பிட சான்ஸ் கிடைச்சா  மிஸ் பண்ண மாட்டீங்க!! 
Next articleஇதனை அரை டம்ளர் குடித்தால் அரை மணி நேரம் போதும்!!குழந்தைகள் வயிற்று புழுக்கள்  வெளியேற்ற அருமையான டிப்ஸ்!!